திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட
அதிமுக சார்பில் யார் அந்த சார்? ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம்.
மாவட்டச் செயலாளர் மு. பரஞ்ஜோதி தலைமையில் நடந்தது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் யார் அந்த சார் என்ற சர்ச்சை பெரும் பூதாகரமாகியுள்ளது.
இந்த நிலையில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் யார் அந்த சார் எந்த ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம் பெட்டவாய்த்தலை பகுதியில் நடைபெற்றது .
இந்தப் போராட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி தலைமையில் ஏற்று நடத்தினார்.
இந்நிகழ்வில் அமைப்புச் செயலாளர்கள் வளர்மதி, மனோகரன், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான்,இலக்கிய அணி மாவட்ட செயலாளர் ஸ்ரீதர்,மீனவர் அணி மாவட்ட செயலாளர் பேரூர் கண்ணதாசன்,
பேரவை அய்யம்பாளையம் ரமேஷ் , மாணவரணி அறிவழகன், வழக்கறிஞர் அணி வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர் புங்கனூர் கார்த்திக், இளைஞர் அணி தேவா,ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார் , முத்து கருப்பன் கோப்பு நடராஜ், கடிகை ராஜகோபால், சிறுகமணி செந்தில்,ஆதி சிவன்,நிர்வாகிகள் வண்ணான் கோயில் முத்துக்குமார், வி.என்.ஆர் செல்வம், திருப்புகழ்,மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டு
அனைத்து நிர்வாகிகள் மற்றும் அதிமுக தொண்டர்கள் வாகனங்களிலும் யார் அந்த சார்? ஸ்டிக்கரை ஒட்டினார்கள்.