மாவட்ட கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற காஜாமியான் பள்ளிக்கு கால்பந்து வீரரும் அதிமுக மாவட்ட செயலாளருமான சீனிவாசன் பரிசுகளை வழங்கினார் .
திருச்சி மாவட்ட கால்பந்து கழகம் சார்பில்
பள்ளி மாணவர்களுக்கு இடையிலான கால்பந்து போட்டி
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் பரிசுகள் வழங்கினார்.
திருச்சி மாவட்ட கால்பந்து கழகத்தின் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற சாக்கர் கிங் பிலே கால்பந்து இறுதிப் போட்டியில் காஜா மியான் மேல்நிலை பள்ளி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல் நிலை பள்ளியை 5—0
கோல் அடித்து வெற்றி வாகை சூடியது.
இறுதிப் போட்டி பரிசளிப்பு விழாவில் திருச்சி மாவட்ட
முன்னாள் கால்பந்து வீரரும், முன்னாள் துணை மேயரும், திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளருமான ஜெ.சீனிவாசன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார் .
இந்த நிகழ்ச்சியில்
மாவட்ட கால்பந்து கழக தலைவர் வீர சிவக்குமார் துணை தலைவர்கள் உக்ரமகாளி ஜமால் முகமது கல்லூரி உடற்கல்வி இயக்குனர் டாக்டர்.ஷாகின் ஷா செயற்குழு உறுப்பினர் இலியாஸ் ஷரீப் ஹரிஹர சுதன்
மற்றும் அன்பு வெங்கட் பிரபு கதிரவன் லோகநாதன் நாகராஜன் ,
மாநகர் மாவட்ட காங்கிரஸ் விளையாட்டு அணி தலைவர் ஆனந்த்
மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இறுதியில் ஒருங்கிணைப்பாளர்
தம்பிரான் நன்றி கூறினார்.