Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சிறு மழை தான் ஆனால் பாதிப்பு அதிகம் திருச்சி மாவட்ட ஆட்சியர் பார்வைக்கு விடுமுறை ஒன்று மட்டும் தான் தீர்வா?

0

'- Advertisement -

 

Ad banner

திருச்சி மக்கள் நீதி மய்யம் தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சிறு மழை தான் ஆனால் பாதிப்பு அதிகம் திருச்சி மாவட்ட ஆட்சியர் பார்வைக்கு
விடுமுறை ஒன்று மட்டும் தான் தீர்வா?

திருச்சியில் நேற்றிலிருந்து [11.12.2024] தொடர்ந்து இன்று வரை விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

திருச்சியை பொறுத்த வரையில் மாநகர் பகுதியை மட்டும் தான் மழை நிலவரம் மற்றும் அதன் பாதிப்புகளை திருச்சி மாவட்ட நிர்வாகம் கணக்கிடப்படுவதாகவும், புறநகர் பகுதியில் குறிப்பாக வளர்ந்து வரும் பகுதியில் மழையினால் பொதுமக்கள் படும் கஷ்டங்களை மாவட்ட நிர்வாகம் கவனிப்பதேயில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

உதாரணத்திற்கு திருச்சி புறநகரில் வளர்ந்து வரும் பகுதியான ஸ்ரீரங்கம் தாலுக்காவிற்குட்பட்ட கம்பரசம்பேட்டை, முத்தரசநல்லூர் மற்றும் திருவெறும்பூர் தொகுதிகுட்பட்ட திருச்சி மாநகரில் புதிதாக இணைக்கப்பட்ட ஐந்து வார்டுகள் மற்றும் கருமண்டம், தீரன்நகர், கே.கே.நகர், ஓலையூர், குண்டூர், மாத்தூர் உள்ளிட்ட திருச்சி புறநகரில் வளர்ந்து வரும் பெரும்பாலான பகுதிகளில் சாலை வசதிகள் முறையாகயில்லை என்றும், இந்த பகுதியிலிருந்து அநேக குழந்தைகள் மாநகரில் இயங்கும் பள்ளியில் படிப்பதாகவும். அதனால் மழை காலங்களில் காலை நேரங்களில் வீட்டிலிருந்து பள்ளிக்கு குழந்தைகளை விட படாதபாடு படவேண்டியுள்ளது என பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

மேலும் மழை அளவை மட்டுமே கணக்கிடுவதாகவும், மழையினால் சாலை உள்ளிட்டவை பழுது ஏற்படுவதால் பொதுமக்கள் படும் இன்னல்களை மாவட்ட நிர்வாகம் கணக்கிட தவறுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் விடிய, விடிய மழை பெய்தால் மட்டுமே பள்ளிக்கு விடுமுறை என கடந்த காலங்களில் முடிவு எடுக்கப்பட்டதை போல தற்பொழுதும் இதே நடைமுறை கடைபிடிக்கப்படுவது வருத்தமளிக்கிறது.

மேலும் இனி வரும் காலங்களில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் கனமழை மற்றும் சாதாரண மழை காலங்களில் மாவட்ட முழுவதும் விடுமுறை என்பது போன்ற அதர பலசான நடைமுறையை பின்பற்றாமல், தாலுகா வாரியாக மழை அளவை கணக்கிட்டு குழந்தைகள், பெற்றோர்கள் பாதிப்பில்லாதவாறு தாலுகா வாரியாக முடிவெடுப்பதுடன், மழை காலங்களில் பள்ளிகளை தாமதமாக திறப்பது போன்ற தற்பொழுது காலத்திற்கு ஏற்ற சிறந்த முடிவெடுக்க மக்கள் நீதி மய்யம் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் வலியுறுத்தி கேட்டுகொள்கிறோம் என தனது அறிக்கையில் கூறி உள்ளார் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.