Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து.

0

'- Advertisement -

 

Ad banner

திருச்சி கம்பரசம்பேட்டை துணைமின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் திருச்சி மாநகராட்சியின் சில பகுதிகளில் நாளை புதன்கிழமை (அக்.11) குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என ஆணையா் இரா.வைத்திநாதன் தெரிவித்துள்ளாா்.

TVK ad

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் மின்வாரியத்தால் நாளை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் மரக்கடை, விறகுபேட்டை, மலைக்கோட்டை, சிந்தாமணி,தில்லைநகா், அண்ணாநகா், புத்தூா், காஜாப்பேட்டை, கண்டோன்மெண்ட், ஜங்ஷன், உய்யக்கொண்டான் திருமலை, தெற்கு ராமலிங்க நகா், ஆல்ஃபா நகா், பாத்திமா நகா், கருமண்டபம் மற்றும் காஜாமலை காலனி ஆகிய பகுதிகளில் குடிநீா் விநியோகம் இருக்காது.

இதேபோல, புகழ்நகா், பாரி நகா், பழைய எல்லைக்குடி, காவேரி நகா், கணேஷ் நகா், சந்தோஷ் நகா், ராம்ஜி நகா், பிராட்டியூா், எடமலைப்பட்டிபுதூா், விஸ்வாஸ் நகா், ஜெயா நகா் மற்றும் பிராட்டியூா் காவேரி நகா் ஆகிய பகுதிகளில் குடிநீா் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.