Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழகத்தில் இன்று பெட்ரோல் 26 காசு, டீசல் 29 காசு உயர்வு.

0

'- Advertisement -

தமிழகத்தில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 26 காசுகள் அதிகரித்துள்ளது.

Ad banner

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதன்படி தமிழகத்தில் நேற்று பெட்ரோல், லிட்டர் 89.13 ரூபாய், டீசல் லிட்டர் 82.04 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து 89.39 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 29 காசுகள் அதிகரித்து 82.33 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நடைமுறை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.