Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தேர்தல் புறக்கணிப்பு: சாலை விரிவாக்க பணிகளால் பாதிக்கப்படுவோர் முடிவு.

0

திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை NH 67 ( பழைய பால் பண்ணை முதல் துவாக்குடி வரை ) சாலை விரிவாக்கப் பணிகளால் பாதிக்கப்படுவோர் கூட்டமைப்பின் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை திருச்சி காட்டூரில் இக் கூட்டமைப்பின் தலைவர் மாரியப்பன் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜ் சிறப்புரையாற்றினார்.

மேலும் கூட்டமைப்பின் செயலாளர் ரகுநாதன் ஒருங்கிணைப்பாளர்கள் ரவி சங்கர், செந்தில் N. பாலு, சம்சுதீன், பிரேம்ஆனந்த் மற்றும் விரிவாக்கப் பணிகளால் பாதிக்கப்படுவோர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அவசரக் ஆலோசனை கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.,

திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை NH 67 ( பழைய பால் பண்ணை முதல் துவாக்குடி வரையிலான) 14.5 கி.மீ தூரத்திற்கு சாலை புதிய படுத்தும் பணிக்காக சாலையின் இரு புறத்திலும் உள்ள ஆயிரக்கணக்கான வணிகம் மற்றும் குடியிருப்புகள் படுத்துவதற்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தை காரணம் காட்டி கட்டிடங்கள் இடிக்கப்பட உள்ளது. இதனை தவிர்க்க பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரை 14.5 கி.மீ தூரத்திற்கு உயர்மட்ட பறக்கும் பாலம் அமைக்க வேண்டும்,

மாநகர பகுதி வழியாக வெளியூர் செல்லும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் ரிங் ரோடு திட்டம். திருச்சியில் முதல் கட்டமாக ஆசூர் துவங்கி வரும் வரை அரைவட்ட ரிங் ரோடு அமைக்கம் பணி தொடங்கி பல தற்போது வரை முற்றுப்பெறாத கால் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் பழைய பால்பண்ணை துவாக்குடி வழியாக செல்லும் நிலை உள்ளது. இத்திட்டம் விரைந்து நிறைவேற்றப்பட்டால் பெரும்பாலான போக்குவரத்து நெரிசல் குறையும்.

14.5 கி.மீ தூரம் உள்ள கட்டிடங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில் உயர்மட்ட பறக்கும் பாலம் திட்டத்தை அறிமுகப்படுத்தி அதன்மூலம் போக்குவரத்து நெருக்கடி தீர்க்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முதல் கட்டமாக வரும் 9ஆம் தேதி தமிழ்நாடு வணிகர் சங்க பொது செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியரை பெருந்திரளாக சென்று சந்தித்து மனு அளிப்பது,

மேலும் உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலை ( பறக்கும் பாலம்) அமைக்கக்கோரி வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, மாநில பொது செயலாளர் கோவிந்தராஜுலு ஆகியோர் தலைமையில் தமிழக முதல்வர், துணை முதல்வர், மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது,

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு கோரிக்கைகள் குறித்து சாதகமான பதில் கிடைக்காவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு,

அதன் பின்னரும் எங்கள் வாழ்வாதாரம் குறித்த கோரிக்கைக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் ஆதார் கார்டு,ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை அரசாங்கத்திடம் திரும்ப ஒப்படைப்பது

உள்ளிட்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.