
+1 பள்ளி மாணவி மாயம்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கம் வட்டம் ஜீயபுரம் அருகே பெரிய கருப்பூரை சேர்ந்த கூலி தொழிலாளியான தங்கவேல் இவரது மகள் சுப்ரியா (வயது 16) முசிறியில் உள்ள அமலா மேல்நிலைப் பள்ளி மாணவியர் விடுதியில் தங்கி 11ம் வகுப்பு படித்து வருகின்றார்.
பள்ளி விடுமுறைக்காக தனது பாட்டி வீட்டுக்குச் சென்று மீண்டும் தனது சொந்த ஊரான ஜீயபுரம் அருகில் உள்ள பெரியகருப்பூரில் உள்ள தந்தை வீட்டுக்கு வந்துள்ளார்.
வழக்கம்போல் தந்தை வேலைக்குச் சென்று வீடு திரும்பி வந்த பொழுது தன் மகளை காணவில்லை என அக்கம் பக்கத்தில் தேடி உள்ளார் ஆனால் எங்கும் காணவில்லை .
இதனைத் தொடர்ந்து தனது மகளை காணவில்லை என தங்கவேல் ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஜீயபுரம் காவல்துறை புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

