திருச்சி குறத்தெரு நகர்ப்புற நல்வாழ்வு மையத்தில் 23 வது வார்டு கவுன்சிலர் சுரேஷ்குமார் குத்து விளக்கு ஏற்றினார்.

தமிழக அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் நகர்புற நல்வாழ்வு மையங்களை தமிழகம் முழுவதும் தமிழக முதல்வர் அவர்கள் 500 இடங்களில் காணொளி காட்சி மூலமாக நேற்று மாலை திறந்து வைத்தார்கள்.
அதனையொட்டி
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 23வது வார்டு குறத்தெரு பகுதியில் மாமன்ற உறுப்பினர் க.சுரேஷ்குமார் குத்து விளக்கு ஏற்றினார்.

இந்நிகழ்ச்சியில் காந்திபுரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் விமலா, ஐந்தாம் மண்டல தலைவர் விஜயலட்சுமி கண்ணன், உதவிஆணையர் சதீஷ்குமார், உதவிபொறியாளர் ராஜேஷ் கண்ணா சுகாதார ஆய்வாளர் இளங்கோவன், மற்றும் அப்பகுதியின் திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், மாநகராட்சி ஊழியர்கள் பொதுமக்கள் திரளாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

