
திருச்சி மாநகரின் லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது.
திருச்சி தென்னூர் ஆழ்வார் தோப்பு பகுதியில் லாட்டரி சீட்டு விற்பதாக தில்லைநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார், அங்கு சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது குழுமணி சாலையில் 3 பேர் லாட்டரி சீட்டு விற்றுக்கொண்டிருந்தனர். இது தொடர்பாக அண்ணா நகரை சேர்ந்த இடியமின் பர்ஹத்துல்லா (வயது 46), பாலக்கரையைச் சேர்ந்த ஜாகிர் உசேன் (58) மற்றும் முகமது இஸ்மாயில் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் பர்ஹத்துல்லா, ஜாகிர் உசேன் ஆகியோரை கைது செய்தனர். தப்பியோடிய முகமது இஸ்மாயிலை தேடி வருகிறார்கள். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து இரண்டு செல்போன்கள் மற்றும் ரூ.4,500 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இது போல் இ.பி. ரோடு பகுதியில் லாட்டரி சீட்டு விற்றதாக அதே பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (48) என்பவரை கோட்டை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 150 ரூபாயும் பறிமுதல் செய்தனர்.

