
திருச்சி கொட்டப்பட்டு
இலங்கை அகதிகள் முகாமில் கல்லூரி மாணவி திடீர் மாயம்.
திருச்சி கொட்டப்பட்டு ஜெ. ஜெ. நகர் புதுக்கோட்டை மெயின் ரோடு பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் வசித்து வருகின்றனர்.
இந்த முகாமைச் சேர்ந்த ஒரு மாணவி திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார் இந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி அந்த மாணவி அருகாமையில் உள்ள ஒரு கடைக்கு செல்வதாக கூறிச் சென்றார் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர் ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை அதைத் தொடர்ந்து மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் கேகே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

