இன்றைய ராசிப்பலன் – 28.12.2020
மேஷம்
உங்களின் ராசிக்கு வரவுக்கு மீறிய செலவு இருக்கும்.உடன்பிறந்தவர்களால் வீட்டில் ஒற்றுமை குறைந்து இருக்கும். உத்தியோக ரீதியில் எடுக்கும் முயற்சி இடையூறு கொடுக்கும். நண்பர்களின் ஆதரவு ஒத்துழைப்பை தரும். பயணங்களால் அனுகூலம் கிடைக்கும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு எந்த செயலிலும் மன மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் இருக்கும். வெளியூர் பயணங்கள் செல்லக் கூடும். உத்யோகத்தில் பணிபுரிபவர்களுக்கு நல்ல பதவிகள் உண்டாகும். தொழிலுக்காக வாங்கிய நவீன கருவிகள் நல்ல பலனை தரும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு பணவரவு சுமாராக இருக்கும். வீட்டில் சிறு சிறு சலசலப்பு இருக்கும். உத்தியோகத்தில் மந்தநிலை இருக்கும்.பூர்வீக சொத்துக்களில் அலைச்சலும் அதற்கேற்ப லாபமும் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் நண்பர்களால் கிடைக்கும்.
கடகம்
உங்களின் ராசிக்கு பொருளாதாரம் சீராக இருக்கும். வீட்டில் அமைதி உண்டாகும். குழந்தைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிட்டும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் நீங்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு மனதிற்கு புது தெம்பு உண்டாகும்.பெரியவர்களின் ஆதரவால் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். சுப காரியங்கள் முயற்சி வெற்றியை கொடுக்கும். புதிய பொருள் சேர்க்கை இருக்கும்.
கன்னி
உங்களின் ராசிக்கு உத்தியோகத்தில் வேலைச்சுமை இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத செலவுகள் இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் எச்சரிக்கையாக செயல்பட்டால் மட்டுமே அனுகூலப் பலனை அடைய முடியும்.
துலாம்
உங்களின் ராசிக்கு மனக் குழப்பத்துடன் இருப்பீர்கள்.பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். சந்திராஷ்டமம் உங்கள் ராசியில் இருப்பதால் அமைதியாக இருப்பதே நல்லது.பெண்கள் பணம் நகை போன்றவற்றை பிறருக்கு இரவல் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு எதிலும் சுறுசுறுப்புடன் இருப்பீர்கள்.வீட்டில் பிள்ளைகள் வழியில் திருமண செய்திகள் வரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். உறவினர்களால் அனுகூலம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினை ஓரளவு நீங்கும்.
தனுசு
உங்களின் ராசிக்கு வீட்டில் தாராள தன வரவு சுபிட்சமும் இருக்கும். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் உண்டாகும். வெளியூர் வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.உத்தியோகத்தில் தேக்க நிலை நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.
மகரம்
உங்களின் ராசிக்கு வீட்டில் உறவினர்களால் மன நிம்மதி நீங்கும். திடீர் செலவுகள் உண்டாகும். சுப காரியங்களில் சிந்தித்துச் செயல்பட வேண்டும் அதுவே நல்லது. உற்றார் உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி உண்டாகும். வருமானம் இரட்டிப்பாகும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு உற்றார் உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கூடும். வீண் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மந்தநிலை இருக்கும். தொழிலில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது தரும். தெய்வ வழிபாடு முன்னேற்றத்தை கொடுக்கும்.
மீனம்
உங்களின் ராசிக்கு வீட்டில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் இருக்கும். இதில் தேவையான பொருட்கள் வாங்க ஆர்வம் கூடும். குழந்தைகள் பொறுமை படும் படி நடந்து கொள்வார்கள். உத்தியோக ரீதியாக வெளியூர் நபர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை கொடுக்கும்.