Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி இன்று மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் மேயர் ஆய்வு.

0

'- Advertisement -

தொடர் மழை காரணமாக இன்று திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதியில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் மேயர் ஆய்வு மேற்கொண்டார்.

Ad banner

இதில் உறையூர் கோனக்குறை பகுதி, மேல சிந்தாமணி, பகுதி ஸ்ரீரங்கம். ஆர்.எம்.எஸ். காலனி, எயூடி காலனி, கோரையாறு ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு மழை நீர் தேங்கியதை உடனடியாக அற்ற பொறியாளர்களுக்கு உத்தரவு விட்டார்.

மேலும் ஆங்காங்கே தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

பின்னர் மேயர் மு அன்பழகன் தெரிவித்ததாவது:

தேங்கும் தண்ணீரை அகற்ற மண்டலத்துக்கு இரு 10 எச்பி மோட்டார்களும் வாங்கப் பட்டுள்ளது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு உத்தரவின் பேரில் மழைக்காலத்துக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டு பருவமழையை எதிர்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.

மாநகராட்சி பகுதிகளில் அதிகளவு தண்ணீர் தேங்கும் டோபி காலனி , ராஜீவ் காந்தி நகர் , ஆதிநகர் , பாத்திமா நகர் , ஏயுடி நகர் , கிருஷ்ணாபுரம் , துளசிங்க நகர் ஆகிய 7 இடங்களில் தண்ணீரை உடனடியாக அகற்ற 20 எச்பி டீசல் மோட்டார் கொண்ட பம்பிங் ஸ்டேசன் அமைக்கப்பட்ள்ளது. மழைநீர் வடிகால்கள் தூர் வாரப்பட்டுள்ளது. இங்கு மின்மோட்டாரும் வைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் பெய்த மழையால் மழைநீர் எங்கும் தேங்கவில்லை பருவமழைக்காலத்தில் திருச்சி மாநகரில் மழைநீர் எங்கும் தேங்காத அளவுக்கு மாநகர் முழுவதும் மழைநீர் வடிகால்கள் தூர் வாரப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.