பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115 வது ஜெயந்தி முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அதிமுக. அமைப்புச் செயலாளர் டி. ரத்தினவேல், மாநில எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் சீனிவாசன், ஆவின் சேர்மன், மாணவரணிச் செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட இணைச்செயலாளர் ஜாக்குலின், ,பகுதி செயலாளர்கள் நாகநாதர் பாண்டி, அன்பழகன், எம்.ஆர்.ஆர் முஸ்தபா, மாமன்ற உறுப்பினர்கள் அரவிந்தன், அம்பிகாபதி, மாவட்ட அணி செயலாளர்கள் ராஜேந்திரன், தென்னூர் அப்பாஸ், இலியாஸ், சிந்தாமணி தலைவர் சகாதேவ் பாண்டியன் பேரவை ராஜசேகர், மாணவரணி குமார், புத்தூர் சதீஷ்குமார், என்ஜினியர் ரமேஷ், பொன். அகிலாண்டம், தர்கா காஜா, காசிப்பாளையம் சுரேஷ், கட்பீஸ் ரமேஷ், ரமணிலால், வண்ணாரப்பேட்டை ராஜன், வெல்லமண்டி கண்ணியப்பன், வட்டச் செயலாளர் வினோத்குமார் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.