Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழக கோவில்களில் பழம் தின்று கொட்டை போட்ட ஊழியர்களால் தலைவிரித்து ஆடும் ஊழல். நடவடிக்கை எடுக்கப்படுமா?இந்து திருக்கோயில்கள் மீட்பு இயக்க நிறுவனத் தலைவர் கேள்ளி

0

'- Advertisement -

இந்து திருக்கோயில் மீட்பு இயக்க நிறுவனத் தலைவர் வழக்கறிஞர்  மகேஸ்வரி வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூடியிருப்பதாவது:-

 

Ad banner

தமிழக கோவில்களிலும்

மாற்றம் வேண்டும்!

மாற்றம் வேண்டும்!

பழம் தின்று கொட்டை போட்ட ஊழியர்களால்

தலைவிரித்து தாண்டவம் ஆடும் ஊழல்!!

கோவில்களில் நடைபெற்று வரும் முறைகேடுகள் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!

தமிழக இந்து சமய அறநிலையத்துறை (HR&CE) இணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்களின் அலுவலகங்கள் மற்றும் திருக்கோயில் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில், பழனி முருகன் கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் உள்ளிட்ட முதல் நிலைக் கோவில்களிலும், உதவி ஆணையர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பிற திருக்கோயில் அலுவலகங்களிலும், சில ஊழியர்கள் 20 முதல் 30 ஆண்டுகள் வரை ஒரே கோவிலிலேயே தொடர்ந்து பணியாற்றி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

நீண்ட காலமாக ஒரே இடத்தில் பணியாற்றுவதால், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை குறைவதற்கும், முறைகேடுகள் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் உருவாகுவதற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.

எனவே, திருக்கோயில் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் நிர்வாகத் திறன் உறுதி செய்யும் வகையில், பல ஆண்டுகளாக ஒரே கோவிலில் பணியாற்றி வரும் ஊழியர்களை உரிய விதிமுறைகளின்படி பணியிட மாற்றம் செய்! இடமாற்றம் செய்!!

தமிழக அரசே! தமிழக அரசே!

பல ஆண்டுகளாக ஒரே கோவிலில் பணியாற்றி வரும் ஊழியர்களை விதிமுறைகளின்படி பணியிட மாற்றம் செய்!

பணியிட மாற்றம் செய்!

கோவில் நிர்வாகத்திலும் மாற்றத்தை உருவாக்கு!

வெளிப்படைத்தன்மையை உறுதி செய்!

நிர்வாகச் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்!

முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசே, நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு!

என மகேஸ்வரி வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.