Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க சென்ற அமைச்சர் அருண்ராஜ் மக்களின் எதிர்பால் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்தி திரும்பினார்

0

'- Advertisement -

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க சென்ற அமைச்சர் அருண்ராஜை பொதுமக்கள் விரட்டியடித்தனர்.

Ad banner

தாராபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்று ராஜினாமா செய்து தவெகவில் இணைந்து அதே தொகுதியில் போட்டியிடும் சத்தியபாமாவுக்கு தொகுதியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இவர் போகும் இடமெல்லாம் மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்து வருகிவதால், பிரசாரத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு வீடு திரும்பும் நிலை உள்ளது.

 

இதனால் போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டு வேட்டையாடி வருகிறார். இந்நிலையில், சத்தியபாமாவுக்கு பதிலாக, தமிழக அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், நேற்று பிரசார களத்தில் இறங்கினார். அவருடன், அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் எம்எல்ஏ உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் தவெக நிர்வாகிகள் சென்றனர். அமைச்சர் அருண்ராஜ், தாராபுரம் குண்டடம் மேற்கு பகுதியில் நேற்று காலை வாக்குசேகரித்தபோது அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் ஒன்றுசேர்ந்து அவரை முற்றுகையிட்டு, பிரசாரம் செய்ய விடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

அப்போது, ”சந்தர்ப்பவாதிகள் தாராபுரம் தொகுதிக்குள் வர வேண்டாம். எங்கள் தொகுதிக்கு ஏதாவது காரியம் செய்ய மாட்டாரா? என ஏங்கி நாங்கள் ஒருவரை தேர்வு செய்தோம். ஆனால், அந்த நபர், எங்களை சற்றும் மதிக்காமல், அவரது சுயநலத்துக்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் வேறு கட்சி சார்பில் இங்கேயே போட்டியிடுகிறார். அவருக்காக நீங்களும் வாக்கு கேட்டு வருகிறீர்கள். எங்களை பார்த்தால் உங்களுக்கு எப்படி தெரியுது…?” என சரமாரியாக கேள்வி எழுப்பி மக்கள், அமைச்சர் அருண்ராஜை பேச விடாமல் தடுத்தனர்.மக்கள் ஆவேசமாக இருப்பதை உணர்ந்து அமைச்சர் அருண்ராஜ், அவர்களுக்கு ஏதேதோ விளக்கம் அளிக்க முயன்றார். ஆனால், யாரும் அவரது விளக்கத்தை கேட்கவில்லை. நிலைமை வேறு விதமாக செல்வதை உணர்ந்த அவர், கையெடுத்து கும்பிட்டுவிட்டு, நைசாக அங்கிருந்து விடை பெற்று சென்றார். அவருடன் வந்த தவெகவினரும் இடைத்தேர்தலில் நாம் வெற்றி பெறுவோமா? எங்க போனாலும் இப்படி விரட்டியடிக்குறாங்களே என முணுமுணுத்தபடி சென்றனர். வேட்பாளரை போலவே, அவருக்கு ஆதரவாக களம் இறங்கிய அமைச்சரையும் தாராபுரம் தொகுதி மக்கள் விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

* பிரசாரத்தை நிறுத்திய தவெக வேட்பாளர்

தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா செல்லும் இடமெல்லாம், ‘எங்களிடம் வாக்கு கேட்டு வர வேண்டாம்’, ‘பெட்டி சத்தியபாமா’, ‘ரூ.50 கோடி வாங்கி கொண்டு ஓட்டு போட்ட எங்களை ஏமாற்றி விட்டாயே’, ‘கட்சி மாறிய துரோகி, காசு வாங்கிவிட்டு கட்சியை காட்டிக் கொடுத்தாயே’ என மக்கள் விரட்டியடிப்பதால் மனமுடைந்த நிலையில் உள்ளார். இந்நிலையில், சத்தியபாமாவுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதாகவும், அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாகவும் கூறப்படுகிறது. எனவே, தவெக வேட்பாளர் சத்தியபாமாவின் பிரசாரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.