திருச்சி 18 வது வார்டில் நடைபெற்ற கிராம பகுதி சபா கூட்டத்தின் தமுமுக, மமக முன்னாள் மாவட்ட துணை தலைவர் மு.சையது முஸ்தபா வார்டு பொதுமக்கள் குறைகளை தீர்க்கக்கோரி மனு
நேற்று செவ்வாய்க்கிழமை (15.9.26 ) தமிழ்நாடு அரசு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு குழு எண் -02 வார்டு எண் -18 கிராம பகுதி சபா கூட்டம் விறகுபேட்டையில் நடைபெற்றது.
திருச்சி தெற்கு மாவட்டம், 18 வது வார்டு, பூக்கொல்லை கிளை, மனிதநேய மக்கள் கட்சி சார்பாக கலந்து கொண்ட தமுமுக, மமக முன்னாள் மாவட்ட துணை தலைவர் மு.சையது முஸ்தபா தங்கள் பகுதியில் உள்ள பொதுமக்களின் பிரச்சனைகளை எடுத்துரைத்தார்.
பாதாள சாக்கடை உடைப்பு, சாக்கடை அள்ளுவது, இரட்டை வாய்க்கால் தூர்வாரும் பணி, தெரு விளக்கு எரியாமல் இருப்பது , தெருக்களில் தெரு நாய் தொல்லைகள் அதிகரிப்பு, பல இடங்களில் சிமெண்ட், தார் சாலை உடைப்பு, குடிநீர் மிகவும் குறைவாகவும், கலங்களாகவும் வருவது, முதியோர் பணம் தருவதற்கு எங்கள் பகுதியில் நிலையான கட்டிடம் அமைத்து தருவது, உடற்பயிற்சி நிலையம் அமைத்து தருவது, வேகத்தடை அமைத்து தருவது, மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஆட்கள் பற்றாக்குறை மாபெரும் பிரச்சனையாக உள்ளது, போன்ற பல்வேறு பிரச்சனைகளை மனிதநேய மக்கள் கட்சி சார்பாக எடுத்துரைத்து புகார் மனு கொடுக்கப்பட்டது.
மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர் மனுவினை பெற்றுக் கொண்டு, மிக விரைவாக மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து சரி செய்து தருவதாக வாக்குறுதி அளித்து உள்ளனர்.

