ஸ்ரீரங்கத்தில் திருமணமான மூன்றாவது ஆண்டில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் விசாரணை .
திருச்சி திருவானைக்காவல் கீழே உள் வீதி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 22) இவர் தில்லைநகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார் .. இவரது மனைவி சரஸ்வதி (வயது 22) இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். மூன்று வருடங்கள் ஆன நிலையில் இவர்களுக்கு குழந்தை இல்லை.
மனைவி சரஸ்வதி திருவானைக்காவலில் உள்ள ஒரு ஹோட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 24 ந் தேதி வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய ராஜ்குமார் தனது மனைவி சரஸ்வதியை திருவானைக்காவல் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று இறக்கி விட்டார். பிறகு வீட்டில் சென்று தூங்குவதாக கூறிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் வேலை முடிந்து மாலையில் சரஸ்வதி வீட்டிற்கு வந்து பார்த்த போது ராஜ்குமார் துணி காய வைக்கும் கம்பியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீ ரங்கம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

