Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழ்நாடு இரு சக்கர வாகனம் பழுதுபார்ப்போர் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பின்​ பெயரை முறைகேடாகப் பயன்படுத்திய முன்னாள் நிர்வாகிகள் 2 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை..

0

'- Advertisement -

தமிழ்நாடு இரு சக்கர வாகனம் பழுதுபார்ப்போர் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பின்​ பெயரை முறைகேடாகப் பயன்படுத்திய முன்னாள் நிர்வாகிகள் இரண்டு பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை..

Ad banner

நீக்கப்பட்ட இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க கூட்டமைப்பு சார்பில் திருச்சி மாவட்ட எஸ்பி இடம் மனு

தமிழ்நாடு இரு சக்கர வாகனம் பழுதுபார்ப்போர் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பின் பெயரை தவறாகப் பயன்படுத்தி கூட்டம் நடத்த முயலும் நீக்கப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கூட்டமைப்பின் மாநில தலைவர் ஆர்.குழந்தைவேலு, மாநில பொதுச் செயலாளர் பி. சண்முகம், மாநில பொருளாளர் என். திருநாவுக்கரசு, மாநில துணைத்தலைவர்கள், துணைச் செயலாளர்கள், திருச்சி மாவட்ட தலைவர் ரகு, மாவட்ட செயலாளர் பழனிச்சாமி மற்றும் அனைத்து கிளை சங்க நிர்வாகிகள் இன்று புதன்கிழமை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:

​தமிழ்நாடு இரு சக்கர வாகனம் பழுதுபார்ப்போர் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பு (பதிவு எண்: 459/2002) என்ற பெயரில், கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மாநில பொதுக்குழு, செயற்குழு மற்றும் நிர்வாகக் கூட்டங்கள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. ​இந்நிலையில், சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்ட ஜானகிராமன் மற்றும் கிசிங்கர் ஆகிய இருவரும், கூட்டமைப்பின் பெயர் மற்றும் பதிவு எண்ணை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி (30.8.2026) கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக ஆதாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது. கூட்டமைப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பண வசூல் செய்தல், நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துதல், கிளைச் சங்கங்களிடையே குழப்பத்தை உருவாக்குதல் மற்றும் ஸ்பான்சர் நிறுவனங்களுக்கு தபால் அனுப்பி ஆதாயம் தேடுதல் போன்ற செயல்களில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

​எனவே, சங்கத்தின் பெயர் மற்றும் பதிவு எண்ணைப் பயன்படுத்தி கூட்டங்களை நடத்த அனுமதி அளிக்கக் கூடாது என்றும், முறைகேட்டில் ஈடுபடும் ஜானகிராமன் மற்றும் கிசிங்கர் ஆகியோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளனர்.

இது குறித்து விசாரித்த மாவட்ட கண்காணிப்பாளர் விரைவில் சட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாக கூறினார் …

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.