Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

என்னுடன் உல்லாசமாக இருந்து விட்டு திருமணம் செய்ய மறுப்பு. திருச்சி சிறப்பு காவல்படையில் பணிபுரியும் காவலர் மீது வங்கி பெண் மேலாளர் புகார்.

0

'- Advertisement -

Ad banner

என்னுடன் உல்லாசமாக இருந்து விட்டு திருமணம் செய்ய மறுப்பு. திருச்சி சிறப்பு காவல்படையில் பணிபுரியும் காவலர் மீது வங்கி மேலாளர் புகார்.

சென்னையில் உள்ள தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வரும் 26 வயது பெண், தனது காதலர் மீது புகார் அளித்தார்.

திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தோம். அவர் மீதுள்ள நம்பிக்கையில் என்னையே அவருக்கு பரிசாக வழங்கினேன். இருவரும் கணவன்-மனைவி போல வாழ்ந்தோம். ஆனால் திருமணம் செய்ய மறுக்கிறார் என்றார். இந்த புகாரில் காவலர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவர் ஜெயிலுக்கு போக தயாராக உள்ளேன். இந்த பெண்ணை திருமணம் செய்து வாழ மாட்டேன்’ என்று பிடிவாதமாக கூறியிருக்கிறார்.

 

சென்னையில் உள்ள தனியார் வங்கியில் 26 வயது இளம்பெண் ஒருவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். அவர் சென்னை வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.அந்த புகார் மனுவில் அவர் கூறுகையில், சென்னையில் உள்ள தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறேன். நானும், கார்த்திகேயன் (வயது 28) என்பவரும் உயிருக்கு உயிராக காதலித்தோம். திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தோம். அவர் மீதுள்ள நம்பிக்கையில் என்னையே அவருக்கு பரிசாக வழங்கினேன். இருவரும் கணவன்-மனைவி போல தாம்பத்திய வாழ்க்கையில் வாழ்ந்தோம்.கார்த்திகேயன் தமிழக காவல்துறையில் பணியில் சேர தேர்வு எழுதினார். அவருக்கு காவல்துறையில் 2-ம் நிலை போலீஸ்காரர் வேலை கிடைத்தது. அவர் திருச்சி சிறப்பு காவல்படையில் பணியில் சேர்ந்தார். அதன்பிறகு அவரது போக்கில் மாற்றம் ஏற்பட்டது. என்னுடன் செல்போனில் பேசுவதை நிறுத்திக்கொண்டார். சாதியை காரணம் காட்டி, எங்கள் திருமணத்துக்கு அவரது பெற்றோர் குறுக்கே நின்றார்கள். கார்த்திகேயனும் என்னை திருமணம் செய்ய முடியாது என்று மறுத்துவிட்டார்.அவருக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முயற்சி செய்து வருவதாக அறிகிறேன். இதுதொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து, கார்த்திகேயனை எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டுகிறேன்” இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த புகார் மனு தொடர்பாக, சென்னை வேப்பேரி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கார்த்திகேயன் மீதும், அவரது பெற்றோர் மீதும் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டது. தனிப்படை போலீசார் திருச்சி சென்று கார்த்திகேயனை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தார்கள். அவரிடம் பெண் போலீசார் விசாரணை நடத்தியபோது, வங்கி பெண் அதிகாரியை திருமணம் செய்ய உறுதியாக மறுத்தார். “அதைவிட சிறைக்கு செல்ல தயார்” என்றும் அவர் கூறியதாக தெரிகிறது. எனவே, கார்த்திகேயன் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீசார் கூறினார்கள்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.