முதல்வர் விஜய், அமைச்சர் ஆனந்த் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பூஜை செய்து தங்கரதம் இழுத்து அன்னதானம் வழங்கிய முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ஜவர்லால் நேரு

தமிழக வெற்றி கழக நிறுவன தலைவர், தமிழக முதல்வர் C.ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாள் மற்றும் தமிழக வெற்றி கழக பொதுசெயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்தின் 62-வது பிறந்தநாளை
முன்னிட்டு முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி N நடராஜன், திருச்சி மாவட்ட பொறுப்பாளர்கள் செந்தில் மற்றும் தர்கா சவுக்கத் ஆகியோர் தலைமையில் திருச்சி உறையூர் அருள்மிரு வெக்காளி அம்மன் திருக்கோயிலில் சிறப்பு பூஜை மற்றும் தங்கரதம் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு வெல்லமண்டி N. ஜவஹர்லால் நேரு மற்றும் உறையூர் பகுதி செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில்: பகுதி செயலாளர்கள் கௌதம், சூர்யா மற்றும் ஜீவா வட்ட செயலாளர் திவாகர் மற்றும் நிர்வாகிகள் S.P கார்த்திகேயன், T.ராஜா முகமது,தென்னூர் K. அப்பாஸ், சத்தியா, தென்னூர் பிரேம், வரகனேரி சரவணன், சிந்தாமணி மகேந்திரன், கீழகரை முஸ்தபா ,கார்த்திக், சம்சாத் பேகம் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்.

