
திருச்சி வாசன் சிட்டியில் புது ஆட்டோ அடுத்த மாதம் வாங்கலாம் என மனைவி கூறியதால் கணவர் தற்கொலை .
திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள வாசன் சிட்டி 18 ஆவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில் குமார் ( வயது 42 )இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார்.இந்த நிலையில் அந்த ஆட்டோ அடிக்கடி பழுதடைந்து வந்ததால் புதிய ஆட்டோ வாங்க திட்டமிட்டார் . பின்னர் தனது மனைவியிடம் புதிதாக ஆட்டோ வாங்கி தருமாறு கேட்டார்.அதற்கு அவர், பண பற்றாக்குறை இருப்பதால் இன்னும் ஒரு மாதம் கழித்து புதிய ஆட்டோ வாங்கலாம் என கூறி உள்ளார்.
புது ஆட்டோ வாங்க இன்னும் ஒரு மாத காலம் காத்திருக்க வேண்டுமா என கவலை அடைந்து மனம் உடைந்த செந்தில்குமார் எலிமருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றார்.
அவரது மனைவி அவரை மீட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகசேர்த்தார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர், இருந்தபோதிலும் அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி லதா அளித்த புகாரின் அடிப்படையில் சோமரசம்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

