திருச்சி கே.கே. நகரில் பெண் வியாபாரி முகத்தில் முட்டையை வீசி13 பவுன் நகை பறித்த 3 நபர்கள் எஸ்கேப்

இருசக்கர வாகனத்தில் வந்த 3 மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்
திருச்சியில் கடையில் வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்த பெண் வியாபாரியிடம் 13 பவுன் செயினை பறித்து சென்ற 3 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி கே கே நகர் அய்யப்பன் நகர், யாசர் தெரு இலுப்பூர் சாலையை சேர்ந்தவர் மலர்க்கொடி (வயது 53) இவர் அதே பகுதியில் ஒரு தனியார் வணிக வளாகத்தில் பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவரது கடைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள் கடையில் பொருட்கள் விலை குறித்து விசாரிப்பது போல் விசாரித்துவிட்டு அங்கிருந்த முட்டையை எடுத்து அந்த பெண்ணின் முகத்தில் வீசிவிட்டு அவர் அணிந்து இருந்த சுமார் 13 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து கே. கே.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பகலில் பெண்ணிடம் செயின் பறிப்பு சம்பவம் திருச்சி மாநகர மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

