தற்கொலை செய்து கொண்ட அதிமுக தீவிர விசுவாசியின் திருவுருவ படத்திற்கு திருச்சி மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அஞ்சலி செலுத்திய அதிமுகவினர்
தற்கொலை செய்து கொண்ட அதிமுக தீவிர விசுவாசியின் திருவுருவ படத்திற்கு திருச்சி மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அஞ்சலி செலுத்திய அதிமுகவினர்

கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன்(வயது 32). இவர் திருப்பனந்தாள் கடைத்தெருவில் பூக்கடை நடத்தி வந்தார்.
அதிமுகவில் கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளராக பதவி வகித்தார். இவருக்கு முனீஸ்வரி (வயது 25) என்ற மனைவியும், நித்ஸ்ரீ(வயது 1) என்ற பெண் குழந்தையும் உள்ளனர். சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுவில் குழப்பங்கள் நிலவி வருகிறது. அதிமுகவில் வென்ற எம்.எல்.ஏக்கள் சிலர் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ-க்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் இணைந்து வந்தனர்.
இந்நிலையில், அதிமுக-வின் தீவிர விசுவாசியான மகேந்திரன் கட்சியில் நிலவும் இத்தகைய சூழலால் மன உளைச்சலில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, `கட்சியில் நடப்பவற்றால் என்னை மாதிரி எளிய தொண்டர்கள் ரொம்பவே மன வேதனையுடன் இருக்கிறோம். என்னுடைய இறப்பிற்கு பிறகாவது கழக தொண்டர்கள், நிர்வாகிகள் ஒன்று சேர வேண்டும். அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் அ.தி.மு.க-வின் எளிய தொண்டனாக இருக்க ஆசைப்படுகிறேன்’ என்று மகேந்திரன் பேசி வீடியோ எடுத்து அதை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதைதொடர்ந்து தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் மகேந்திரன். இது அதிமுக வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியது. தன் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினால் என் ஆத்மா சாந்தியடையும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் மகேந்திரன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் எடப்பாடி பழனிசாமி.இறந்தவர்கள் குடும்பத்திற்கு 55 லட்ச ரூபாய் வழங்கி அவரது மகளிர் படிப்பு சிலரின் ஏற்றுக் கொள்வதாக இறுதி அளித்த எடப்பாடி பழனிச்சாமி இன்று அதிமுக தொண்டனும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் நான் வேண்டுகோள் விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து நேற்று மாலை திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ஆவின் கார்த்திகேயன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மறைந்த மகேந்திரனின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரத்தினவேல், TR சுரேஷ்குமார்,அம்மா பேரவை மாநில இணைச் செயலாளரும் திருச்சி மாமன்ற உறுப்பினருமான அரவிந்தன்,மாவட்ட துணை செயலாளர் வனிதா,கவுன்சிலர் அம்பிகாபதி,
நிர்வாகிகள் நத்தர்ஷா,கோழி கடை பாலு,சுரேஷ் குப்தா மற்றும் ஏராளமான நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

