அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை சந்தித்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த திருச்சி அமமுக பகுதி செயலாளர் சங்கர்.
அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை சந்தித்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த திருச்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பகுதி செயலாளர் சங்கர்.

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொன்மலை பகுதி செயலாளராக கடந்த 9 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றி வந்த முன்னாள் கவுன்சிலர் ஆர்.சங்கர் கடந்த சில நாட்களுக்கு முன் அக்கட்சியில் இருந்து விலகி உள்ளதாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.


இந்த நிலையில் தற்போது தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளரும் அமைச்சருமான புஸ்ஸி ஆனந்தை நேரில் சந்தித்து தன்னை தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொண்டார்.
மேலும் திருச்சியில் உள்ள தமிழக வெற்றி கடக நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார்

