ஆறாம் வகுப்பு பயிலும் 12 வயது பள்ளி சிறுமிக்கு கஞ்சா கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த காமக்கொடூரன்.

ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது.
இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட அஸ்வின் ராஜ் (வயது 22) என்ற வாலிபரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கடந்த மாதம் நடந்த இந்த அதிர்ச்சி சம்பவத்தில், அஸ்வின் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறிப் பழகி, அவருக்கு வலுக்கட்டாயமாகக் கஞ்சா கொடுத்து மயக்கமடையச் செய்துள்ளார். சிறுமி சுயநினைவற்ற நிலையில் இருந்தபோது, அவருக்கு ஆபாச வீடியோக்களைக் காட்டி பாலியல் ரீதியாக அத்துமீறியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சிறுமி திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதையடுத்து, அவரது பெற்றோர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்களுக்குச் சந்தேகம் ஏற்படவே, அவரிடம் நிதானமாக விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது தான் அஸ்வின் ராஜ் தனக்கு இழைத்த கொடுமைகளை அந்தச் சிறுமி கண்ணீருடன் விவரித்துள்ளார். இதனைத் கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் உடனடியாகக் இது குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். மருத்துவமனை அளித்த தகவலின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த செக்ஸ் காமுகன் அஸ்வின் ராஜை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிஞ்சுச் சிறுமிக்குக் கஞ்சா போன்ற போதைப் பொருட்களைக் கொடுத்துச் சீரழித்த அந்த நபருக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபகாலமாகச் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் வேளையில், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளிடம் அறிமுகமில்லாத நபர்கள் பழகும் விதத்தைக் கண்காணிப்பது அவசியம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். கைதான அஸ்வின் ராஜ் மீது ஏற்கனவே ஏதேனும் வழக்குகள் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

