Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

துணை ஆணையர் சிருஷ்டி சிங் அவர்களே உங்களுடைய ஆதிக்கத்தையும், அடக்குமுறையையும் குண்டர்கள் மீதும் சமுக விரோதிகள் மீதும் காட்டுங்கள். பத்திரிக்கையாளர்கள் மீது வேண்டாம். திருச்சி வழக்கறிஞர் கிஷோர் குமார்.

0

'- Advertisement -

திருச்சி மக்கள் நீதி மய்ய தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

 

Ad banner

மெச்சூரிட்டி இல்லாத உயர் அதிகாரிகள்.

 

இந்திய காவல் பணியில் உடல் தகுதியை தாண்டி புத்தி கூர்மைக்கு தான் மதிப்பு அதிகம். பல சவால்களை, தேர்வுகளை கடந்து இந்திய காவல் பணிக்கு வரும் உயர் அதிகாரிகள். மக்களோடு ஒன்றி பழகாததாலும், கள எதார்த்தம் அறியாமலும்_ எளிதாக தீர்க்கவேண்டிய ஒரு பிரச்சினைகள் இவர்களின் ஆதிக்க மனப்பான்மையால் பிரச்சினை பெரிதாகிறது.

 

இப்படியாக தான் இன்று (24.04.2026)ந் தேதி திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் பாதுகாத்து வைத்திருந்த வாக்கு பெட்டிகளை படம் எடுக்க சென்ற பத்திரிக்கையாளர்களுக்கும் திருச்சி காவல் துணை ஆணையர் சிருஷ்டி சிங் அவர்களுக்குமிடையே நடந்த வாக்கு வாதம் இதையே வெளிப்படுத்துகிறது.

 

பொதுமக்களுடனும், அதிகாரிகளுடனும், இ பத்திரிக்கையாளர்களுடன் கனிவாக நடக்க வேண்டிய ஒரு உயர் காவல் அதிகாரியே அநாகரிகமாக நடந்துகொள்வது ஏற்புடையது அல்ல.

 

மேலும் “ஏய்” என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதவரா இந்த அதிகாரி…..? உங்கள் உயர் அதிகாரியை பார்த்து ஏய் என்று தங்களால் அழைக்க முடியுமா…?

 

பத்திரிக்கையாளர்கள் அப்படி என்ன கேட்டார்கள் வாக்கு பெட்டி விஷிசுவல் தானே. அதற்கு ஏன் இத்தனை களேபரம்.

உங்களுடைய ஆதிக்கத்தையும், அடக்குமுறையையும் குண்டர்கள் மீதும் சமுக விரோதிகள் மீது காட்டுங்கள். மாறாக பத்திரிக்கையாளர்கள் மீது வேண்டாம்.

என வக்கீல்.S.R.கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.