Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாவட்டத்தில் 85.44 சதவிதம் வாக்கு பதிவு. எஸ் ஐ ஆரும் காரணம்.

0

'- Advertisement -

திருச்சி மாவட்டத்தில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிப்புக்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளும் (எஸ்ஐஆா்) ஒரு காரணமாக அமைந்துள்ளதாக தோ்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Ad banner

வாக்காளா் பட்டியலில் இருந்த வாக்காளா்களில் இறந்தோர், இடம் பெயா்ந்தோர், இரட்டைப் பதிவு உள்ளிட்டவற்றை நீக்கி 100 சதவீதம் தூய்மையான வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் வகையில் பேரவைத் தோ்தலுக்கு முன்பாக எஸ்ஐஆா் பணிகளை தொடங்கியது தேர்தல் ஆணையம்.

இதன்படி, திருச்சி மாவட்டத்தில் எஸ்ஐஆா் பணிகளுக்கு முன்பு 9 தொகுதிகளிலும்  மொத்தம் 23,68,967 வாக்காளர்கள்  இருந்தனர். இதில், எஸ்ஐஆா் பணிகள் முடிந்து 2 லட்சத்து 42 ஆயிரத்து 664 பேர் நீக்கப்பட்டனர் 2026 சட்டமன்ற பேரவைத் தோ்தலில் வாக்களிக்க 21,47,051 வாக்காளார  தகுதி பெற்றிருந்தனர

இதில், 85.44 விழுக்காடு பதிவாகியுள்ளது. இது கடந்த 2021  தேர்தலுடன் ஒப்பிடுகையில் சுமார் 12 விழுக்காடு அதிகம்.

எஸ்ஐஆா் பணிகளால் ஏறக்குறைய 10 விழுக்காடுக்கு மேலான வாக்காளா்கள் நீக்கப்பட்டிருப்பதால், வாக்குப்பதிவு சதவீதம் உயா்ந்து காணப்படுகிறது. மேலும், புதிய வரவாக வந்துள்ள கட்சிகளுக்கு இளைஞா்கள் பலரும் ஆா்வமுடன் வாக்களிக்க வந்திருப்பதாலும் கணிசமாக உயா்ந்திருப்பதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது

 

மாவட்டத்திலேயே அதிகபட்சமாக மணப்பாறையில் 88.81 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.