தேர்தல் பிரச்சாரம் முடிந்த அன்று பதியப்பட்ட வழக்கில் அதிமுக பிரமுகர் இன்று திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் முடிந்த அன்று பதியப்பட்ட வழக்கில் அதிமுக பிரமுகர் இன்று திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்.

வழக்கு ஜுன் மாதம் 9-ந் தேதிக்கு ஒத்திவைப்பு.
கடந்த 2021ம் ஆண்டு சட் டமன்ற தேர்தலின் போது திருச்சி மேற்கு தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட அமைச்சர் கே.என். நேருவை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக துணை செயலாளரும், முன்னாள் நகர கூட்டுறவு வங்கி தலைவருமான கருமண்ட பம் பத்மநாதன் போட்டியிட்டார்.
அப்போது அவர் திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் தேர்தல் பிரச்சா மேற்கொண்ட போது தேர்தல் விதிமுறையை மீறியதாக (பிரச்சாரம் நேரம் முடிந்து கூட்டமாக நின்று இருந்ததாக) எடமலைபட்டிதூ டிதூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் பத்மநாதன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு திருச்சி ஜெ.எம்.2 நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது வழக்கை நீதிபதி பரம்வீர் ஜுன் மாதம் 9-ந்தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
பத்மநாதன் சார்பில் அ.தி. மு.க. வக்கீல் முல்லை சுரேஷ் ஆஜரானார்.அப்போது வழக்கறிஞர்கள் டி.ஆர்.மணிவண்ணன், சூர்யா,ராஜா மற்றும் பலர் உடன் இருந்தனர்.

