1.

திருச்சியில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான பெயிண்டர் உயிரிழப்பு.
போலீஸார் விசாரணை.
திருச்சி செந்தணீர்ப்புரம் திரு வி க நகரைச் சேர்ந்தவர் வடிவழகன் (வயது 32) பெயிண்டர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் இவரது மனைவி நித்யா (வயது 35) வடிவழகன் அடிக்கடி குடித்துவிட்டு வருவதால் வீட்டில் தம்பதியினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் வடிவழகன் தன் வீட்டின் வாசலில் உட்கார்ந்து இருந்தார் இதை கவனித்த அக்கம் பக்கத்தினர் அவர் எந்த அசைவும் இன்றி கிடப்பதாக வித்யாவிடம் தெரிவித்தனர். அவரை திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது .
அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து போடு சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2.
திருச்சியில்
மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் தற்கொலை.
திருச்சி கீழ சிந்தாமணி பதுவை நகரை சேர்ந்தவர் எமரசன் (வயது 37) இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார் இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்தது மன உளைச்சலில் இருந்து வந்த எமரசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

