Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி வந்த விஜய்க்கு சிறப்பான வரவேற்பு அளித்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள்

0

'- Advertisement -

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் திருச்சியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 8 கிமீ சாலை வலம் வந்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார் அப்போது, ஏராளமான தொண்டா்கள் விசில் சத்தத்தை எழுப்பி ஆரவாரம் செய்தனா்.

Ad banner

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் திருச்சி கிழக்கு மற்றும் சென்னை பெரம்பூா் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடும் விஜய் கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி பாலக்கரையிலுள்ள அரியமங்கலம் மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு காந்தி மாா்க்கெட் மரக்கடை பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்

அதன்பின் திருச்சி கிழக்குத் தொகுதியில் விஜய் நேரடியாக வந்து பிரசாரம் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் திருச்சி கிழக்குத் தொகுதியில் விஜய் நேற்று பிரசாரம் மேற்கொண்டார் .

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு பிற்பகல் 3 மணிக்கு வந்த விஜய்யை விமான நிலையத்தில் கட்சியின் பொதுச் செயலாளர்  புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிா்வாகிகள் வரவேற்றனர்

தொடர்ந்து அங்கிருந்து வயர்லெஸ் சாலை, தென்றல் நகா், கே.கே.நகா், காஜாமலை, ஈவிஆா் கல்லூரி, கோழிப்பண்ணை, கொட்டப்பட்டு மற்றும் விமான நிலையப் பகுதி என 8 கிமீ தொலைவுக்கு விஜய் திறந்தவேனில் நின்று சாலை வலம் சென்றார்

வயா்லஸ் சாலையில் தொடங்கி அவர் சென்ற வழி முழுவதும் நிர்வாகிகள் ராக்போர்ட் ராஜேஷ் ,கோவில் சீனி ‘காட்டூர் கதிர் ,வாளாடி ஆனந்த் மற்றும் ஏராளமான தொண்டா்கள் அவரைப் பின்தொடா்ந்து சென்று விசில் அடித்து உற்சாகப்படுத்தினா்.

விஜய்யைப் பாா்க்கவும், அவரின் பேச்சைக் கேட்கவும் சாலையின் இருபுறங்களிலும் முண்டியடித்துக்கொண்டு காத்திருந்த குழந்தைகள், பெண்கள் மற்றும் தொண்டா்கள் என அனைவரும் விசில் சத்தம் எழுப்பினார்

விஜய் சாலை வலம் மற்றும் பிரசாரத்துக்கு பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை அனுமதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், பரப்பரையில் பேசாமல் சாலை வலத்தை மட்டும் மேற்கொண்ட விஜய் 1.20 மணி நேரத்துக்கு முன்னதாகவே பிரசாரத்தை முடித்துக்கொண்டு மாலை 6 மணிக்கு தனி விமானம் மூலம் மீண்டும் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றார்

சாலை வலம் வந்த விஜய்யுடன், கே.கே.நகா் பகுதியில் கட்சியின் டெல்டா மண்டலத் தோ்தல் பொறுப்பாளா் கு.ப. கிருஷ்ணனும், காஜாமலை பகுதி திருவெறும்பூா் தவெக வேட்பாளா் நவல்பட்டு எஸ். விஜியும் வாகனத்தில் சாலை வலம் வந்தனா்.

விஜய்யின் சாலை வலத்தை காண வந்த அவரது ரசிகா்கள் மற்றும் தொண்டா்கள் வாகனத்தின் மீது கட்சித் துண்டு, விசில் ஆகியவற்றை விஜய்க்காக வீசினா். மேலும், பலர் அவருக்கு அன்பளிப்பாக வழங்க விஜய்யின் தோ்தல் பரப்புரை தொடா்பான புகைப்படங்கள், விஜய் முதல்வராகப் பொறுப்பேற்பது போன்ற புகைப்படங்களை ‘பிரேம்’ செய்து கொண்டு வந்திருந்தனர்

 

இதேபோல, பொம்மைகள், விசில் மாதிரி, பந்து, கிரிக்கெட் மட்டை உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருள்களை வாகனத்தின் மீது வீசினா். அவற்றை தொண்டா்கள் பிடித்து பிரசார வாகனத்தில் வைத்தனர்

விஜய்யின் சாலை வலத்தைப் பாா்க்க பல்லாயிரக்கணக்கான தொண்டா்கள் வந்திருந்தனா். இதில் ஒருசில இடங்களில் வெயிலின் தாக்கத்தால் சில தொண்டா்கள் மயக்கமடைந்தனா். கூட்டத்தில் பங்கேற்றவா்களில் சிலரது கைப்பேசிகள் திருட்டு போனதாகத் தெரிவித்துள்ளார்

திருச்சியில் வயா்லஸ் சாலை, கே.கே.நகா் மற்றும் கொட்டப்பட்டு சந்திப்பு ஆகிய மூன்று இடங்களில் திறந்த வேனில் நின்றுகொண்டு விஜய் பேசுவதற்கு மாநகரக் காவல் துறை சாா்பில் அனுமதிக்கப்பட்டிருந்தது.

 

ஆனால், 8 கிமீ சாலை வலம் மேற்கொண்ட விஜய், ஒரு இடத்தில்கூட பேசவில்லை. இதனால் கூடியிருந்த ஏரளமான தொண்டா்கள் மிகுந்த ஏமாற்றத்துக்குள்ளாகினா்.

திருச்சி வயா்லஸ் சாலை காமராஜ் நகரில் உள்ள புனித அந்தோணியாா் தேவாலயம், கே.கே.நகரில் உள்ள பள்ளிவாசல் மற்றும் கொட்டப்பட்டு பகுதியிலுள்ள ஸ்ரீபச்சநாச்சி அம்மன் கோயில் ஆகிய மும்மத தலங்களில் விஜய் வழிபாடு நடத்தினார்

புனித அந்தோணியார் தேவாலயத்தில் சிறிது தூரம் முழங்கால் போட்டு விஜய் பிராா்த்தனை செய்தார். தேவாலயம், பள்ளிவாசல் மற்றும் கோயில் ஆகிய மூன்று இடங்களிலும் சம்பந்தப்பட்ட நிா்வாகிகள் விஜய்யை வரவேற்றனர்

கொட்டப்பட்டு பச்சநாச்சி அம்மன் கோயிலில் விஜய் வழிபட்டபோது, அங்கு வந்திருந்த மாற்றுத் திறனாளி பெண் குழந்தையிடம் விஜய் நலம் விசாரித்தார்

திருச்சி வந்த தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு ராக்போர்ட் ராஜேஷ், கோவில் சீனி ,காட்டூர் கதிர் ,வாளாடி ஆனந்த் ஆகியோர் கட்சி துண்டு அணிவித்து வரவேற்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.