Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழக அரசின் சாதனைத் திட்டங்களைப் பட்டியலிட்டு கிழக்குத் தொகுதி வேட்பாளர் இனிக்கோவை ஆதரித்து அமைச்சர் மகேஷ் தீவிர சேகரிப்பு

0

'- Advertisement -

திருச்சி கிழக்கு தொகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சூறாவளிப் பிரச்சாரம்

Ad banner

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் இனிகோ இருதயராஜ் அவர்களை ஆதரித்து, திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொகுதியின் பல்வேறு பகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

கிழக்குத் தொகுதிக்குட்பட்ட சிந்தாமணி, கோரிமேட்டுத் தெரு, ரேஷன் கடை பகுதி, மேல சிந்தாமணி, அண்ணா சிலை, பட்டவர்த்தி ரோடு, முதலியார் தெரு, ஆண்டார் வீதி, 18-ஆம் கருப்பு கோவில், சின்னக்கடை வீதி M.G.R சிலை, பாபு ரோடு, செல்லமுத்து மாரியம்மன் கோவில் தெரு, மேல தேவதானம், டவுன் ஸ்டேஷன், நந்தீஸ்வரர் பள்ளிவாசல் ஆர்ச், பொட்டுக்கடலை மெஷின் மற்றும் ஜீவா நகர் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் வீதி வீதியாகச் சென்று மக்களிடம் வாக்குச் சேகரித்தார்.

பிரச்சாரத்தின் போது மக்களிடையே பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி :- தமிழக அரசின் சாதனைத் திட்டங்களைப் பட்டியலிட்டார் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மற்றும் விடியல் பயணம் (இலவசப் பேருந்து வசதி). இல்லம் தேடி கல்வி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் மற்றும் ‘நான் முதல்வன்’ திட்டம்.  ‘உங்களுடன் ஸ்டாலின்’ மற்றும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்கள்.

“நீங்கள் அளித்த வாக்கினால் தான் இத்தகைய உன்னதமான திட்டங்கள் சாத்தியமானது” எனக் குறிப்பிட்ட அமைச்சர், சட்டமன்ற உறுப்பினராக இனிகோ இருதயராஜ் அவர்கள் தொகுதி மக்களுக்காக சட்டமன்றத்தில் வைத்த கோரிக்கைகளையும், அவர் நிறைவேற்றிய பணிகளையும் விரிவாக எடுத்துக்கூறி மீண்டும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

பிரச்சாரத்தின் போது பேசிய வேட்பாளர் இனிகோ இருதயராஜ், கடந்த ஐந்தாண்டுகளில் தான் தொகுதியில் நிறைவேற்றிய நலத்திட்டங்கள் மற்றும் கட்டமைப்பு வசதிகளை எடுத்துக் கூறி, “தொகுதி மக்களின் தேவைகளை அறிந்து தொடர்ந்து உழைத்திட மீண்டும் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்” என உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிகழ்வில் மாநகரக் செயலாளர் மதிவாணன், தொகுதிப் பார்வையாளர் கதிரவன், , தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன், பகுதி செயலாளர்கள் , மோகன், பாபு மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.