திருவெறும்பூர் தொகுதியில் எதுவும் செய்யாத மகேஷ் பொய்யாமொழி மீண்டும் தேவையா?திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் குமார்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் முதலமைச்சர், அவர்களின் நல்லாசி பெற்ற

திருவெறும்பூர் வெற்றி வேட்பாளர்
ப.குமார் அவர்கள் இன்று இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருச்சி திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட, திருவெறும்பூர் பகுதியான மலைக்கோயில் பஸ் ஸ்டாப் ,
வ. உ .சி .தெரு, ராஜா வீதி, கள்ளர் தெரு, சொன்னது தெரு,விஜயநகரம், IAS நகர், உபகர மாதா கோவில், இந்திரா நகர், வடக்கு கல்லணை ரோடு பஸ் ஸ்டாப், பகவதிபுரம், 123 திருக்கல் கூத்தப்பர் ரோடு, வ உ சி நகர் 123 தெரு, வின்சென்ட் காலனி, குட்செட் ரோடு ஒன்றியம் காலனி பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பொது மக்களிடம் பேசிய போது:-
வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பின் உதயாநிதி மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தண்டிக்கப்படுவார்கள்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி என்ன செய்தார்.இந்த தொகுதி வளர்ச்சி பணிகள், அடிப்படை வசதிகளுக்கு,
நீண்ட காலம் உள்ள பட்டா பிரச்சனைகளை தீர்க்கவில்லை,
அரியமங்கலம் குப்பை கிடங்கை அகற்றுவேன், சர்வீஸ் சாலை அமைப்பேன் ரிங் ரோடு கொண்டு வருவேன் என பல வாக்குறுதிகளை கூறினார் எதுவும் செய்யாத மகேஷ் பொய்யா மொழி இந்த தொகுதிக்கு மீண்டும் தேவையா என்பதை யோசிப்பீர். எனவே வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் அனைவரும் வாக்கு சாவடிக்கு சென்று வாக்கு பெட்டியில் இரண்டாவது இடத்தில் உள்ள இரட்டை இலை சின்னத்தில் எனக்கு (குமார்) வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்யுமாறு உங்கள் பொற்பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன் என பேசினார் .

திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் குமார் பிரச்சாரத்தின் போது திருவெறும்பூர் பகுதி செயலாளர் பாஸ்கர், பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளர் சரவணன்,அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொறுப்பாளர் சசிகுமார் , வட்ட செயலாளர் ரோஷன்
மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சேர்ந்த நிர்வாகிகள்,மாவட்ட கழக நிர்வாகிகள், கிளை செயலாளர்கள் பகுதி கழக செயலாளர்கள், வட்ட கழக செயலாளர்கள் நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

