Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

எங்கள் வாக்குகள் அனைத்தும் இரட்டை இலைக்கு தான். திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் குமாரிடம் பெல் தொழிலாளர்கள் வாக்குறுதி

0

'- Advertisement -

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிடும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அதிமுக வேட்பாளர் ப.குமார் திருவெறும்பு சட்டமன்றத் தொகுதியில் தீவிரவாத்து சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்

Ad banner

இந்நிலையில் இன்று 43,43 ஏ வட்டத்துக்கு உட்பட்ட மலையப்ப நகர் முதல் பொன்மலை ஆர்மரி கேட் வரை தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பொது மக்களிடம் பேசிய போது திமுக ஆட்சியில் அறிவித்த 505 வாக்குறுதிகளில் 360 வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை .

மகளிர்களுக்கு மாதம் ரூபாய் 1000 என்ற திட்டத்தை 28 மாதங்களுக்குப் பின்பு தான் நிறைவேற்றினார் தமிழக முதல்வர் .

இந்த திருவெறும்பூர் தொகுதியில் சர்வீஸ் சாலை அமைக்கப்படும் என கூறினார்கள் இல்லை,அரியமங்கலம் குப்பைக்கடங்கை அகற்றும் என்றனர் இல்லை,ரிங் ரோடு அமைக்கப்படப்படும் என்றனர் இல்லை இந்த தொகுதியில் பத்தாண்டு காலம் அதில் ஐந்தாண்டு காலம் அமைச்சராக இருந்த மகேஷ் பொய்யாமொழி எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை .

தற்போது அதிமுக பொது செயலாளர் தமிழகத்தில் உள்ள அனைத்து இல்லத்தரசிகளுக்கும் மாதம் ரூபாய் 2000 வழங்கப்படும் என கூறியுள்ளார்,அவர்களைப் போன்று தகுதி வாய்ந்த பெண்கள் என யாரையும் பிரித்து பார்க்கவில்லை எனவே அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என பேசினார்.

பின்னர் மாலையில் திருச்சி பிஹெச்எல் கிழக்கு வாயிலில் பெல் தொழிலாளர்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார்.அப்போது அங்கு கூடியிருந்த தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்து பெல் தொழிலாளர்கள் வாக்குகள் அனைத்தும் இரட்டை இலைக்கு தான் என அதிமுக வேட்பாளர் குமாரிடம் வாக்குறுதி அளித்தனர்.

 

பிரச்சாரத்தின் போது அதிமுக பகுதி செயலாளர்கள் ,அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சூரியூர் ராஜ மணிகண்டன்,மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த (பாரதிய ஜனதா அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தமிழ் மாநில காங்கிரஸ்) நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமான திரளாக கலந்து கொண்டனர்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.