அரியமங்கலம் குப்பை கிடங்கு விரைவில் முழுமையாக அகற்றப்படும் . திருவெறும்பூர் திமுக வேட்பாளர் மகேஷ் பொய்யாமொழி உறுதி .மருத்துவ சமுதாய நல சங்கத்தினர் முழு ஆதரவு
மருத்துவ சமுதாய நலச்சங்கத்தினர் திருவெறும்பூர் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் அன்பின் மகேஸ் பொய்யாமொழிக்கு தங்களது ஆதரவை உறுதிப்படுத்தினர்.

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இன்று செவ்வாய்க்கிழமை காலை மருத்துவர் நல சங்கத்தினரை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்.
திருவெறும்பூர் மருத்துவ நலச் சங்கத் தலைவர் ரோமியோ பழனி தலைமையில், பி.ஹெச்.இ.எல் (BHEL) தொமுச அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:
“பொதுவாக அரசியல் அதிகமாகப் பேசப்படும் இடங்கள் இரண்டு; ஒன்று தேநீர் கடை, மற்றொன்று நீங்கள் பணிபுரியும் இடங்கள்தான்.”
திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்தல்: “நாம் இல்லாததையும் பொல்லாததையும் கூறத் தேவையில்லை. கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழக முதல்வர் கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துரைத்தாலே, திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமைவது உறுதி.”

“எனவே, நீங்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை மீண்டும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.”என பேசினார்.
இந்த நிகழ்வில் பி.ஹெச்.இ.எல் தொமுச பொதுச் செயலாளர் தீபன், துணைப் பொதுச் செயலாளர் முத்துக்குமார், கருப்பு மற்றும் முடிதிருத்துவோர் நலச் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக திருவெறும்பூர் தொகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வித்தியாசமான முறையில் இருசக்கர வாகனத்தில் சென்று தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
மக்களுடன் ஒருவராகப் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தொடர்ந்து மூன்றாவது முறையாக இத்தொகுதியில் களம் காணும் அவர், திருவெறும்பூர், பகவதிபுரம், பிரகாஷ் நகர், மலைக்கோவில் மாதா கோயில் தெரு ஒன்றிய தெரு கூத்தைப் பார் பேரூருக்கு உட்பட்ட திடீர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று திமுக அரசின் சாதனைகளை எடுத்துரைத்தார். குறிப்பாக:
இருசக்கர வாகனத்தில் வீதி வீதியாகச் சென்று இளைஞர்கள் மற்றும் பொதுமக்களைச் சந்தித்தார்.
அரசுப் பேருந்துகளில் ஏறிப் பயணிகளிடம் கலந்துரையாடி ஆதரவு திரட்டினார்.
இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மு மதிவாணன் பகுதி செயலாளர் சிவக்குமார் வட்ட செயலாளர்கள் சோமகுணாநிதி அருண் பேரூர் செயலாளர் தங்கவேலு கூத்தைப்பார் பேரூர் மன்ற தலைவர் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பிரச்சாரத்தின் நடுவில் செய்தியாளர்கள் சந்திப்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:-
“எனது தாய் வீடாகக் கருதும் திருவெறும்பூர் தொகுதியில் கடந்த காலங்களில் ரூ450 கோடிக்கும் மேல் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதனால் மக்களிடையே திமுகவிற்கு அமோக வரவேற்பு உள்ளது.”
மக்களின் கோரிக்கைகள்: “பிரச்சாரத்தின் போது மக்கள் உரிமையோடு வழங்கும் கோரிக்கை மனுக்கள் எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றன. மீண்டும் ஆட்சி அமைந்ததும் அனைத்துக் கோரிக்கைகளும் முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றப்படும்.”
குப்பை கிடங்கு அகற்றம்: “அரியமங்கலம் குப்பை கிடங்கை 2027-க்குள் முழுமையாக அகற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது 80% பணிகள் நிறைவடைந்துள்ளன. குப்பைகள் அகற்றப்பட்ட பின் அவ்விடத்தில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.”
சர்வீஸ் சாலை:
“மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சர்வீஸ் சாலை அமைப்பது குறித்து மத்திய அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. வெறும் பெயரளவில் இல்லாமல், மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் சாலை அமைக்கப்படும்.”
அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்த சம்பவம் குறித்த நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்ற அமைச்சர், “தவறு நடந்ததை ஒப்புக்கொள்ளாமல் அப்போதைய முதலமைச்சர் காலம் தாழ்த்தியது வருத்தத்திற்குரியது. இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது” என்று குறிப்பிட்டார்.

