Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் 3வது இடத்தையாவது பிடிப்பாரா?

0

'- Advertisement -

திருச்சி கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராஜசேகரன் செயல்பாட்டால் மூன்றாவது இடமாவது பிடிப்பாரா?

Ad banner

திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட பொருளாளராக ஒரு சில மாதங்களுக்கு முன் நியமிக்கப்பட்ட ராஜசேகரன் அதிமுக தொண்டர்கள் யாருக்கும் தெரியாதவர்.ஏன் சில நிர்வாகிகள் இவரை தெரியாது.

 

தலைமைக்கு பெரிய தொகையை கொடுத்து கட்சி பதவியை வாங்கியவர்,தற்போது 20 சி தேர்தல் நிதியாக கொடுத்து தான் கிழக்குத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு பெற்றுள்ளார் என கூறப்படுகிறது….

 

இவர் அதிமுக சார்பில் நடைபெற்ற எந்த ஒரு ஆர்ப்பாட்டத்திலோ போராட்டங்களிலோ இதுவரை கலந்து கொண்டது இல்லை.

 

அடிப்படை உறுப்பினராக சேர்ந்து படிப்படியாக உயர்ந்து பல பதவிகளில் மக்கள் நன்கு அறிந்த அதிமுகவில் உள்ள நபர்களுக்கு (20, 30 வருடங்கள் அதிமுகவில் மட்டுமே வியர்வை சிந்தி உழைத்து வந்தவர்களுக்கு) வாய்ப்பு இல்லை.

 

அதிமுக கட்சியினருக்கு கூட தெரியாதவருக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளை எப்படி தெரியும்,எந்த பத்திரிகையாளர்களின் இவருக்கு தெரியாது,

யாரிடமும் சிரித்து கூட பேச மாட்டார்.மற்ற அதிமுக வேட்பாளர்கள் குமார் எல்லாம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு திருச்சி வந்த அன்றே திருச்சியில் உள்ள எம்ஜிஆர் , அண்ணா போன்ற தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். (அலுவலகத்தில் ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி ) ஆனால் இவர் இரண்டு நாட்கள் கழித்து தான் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்கு அறிமுகம் ஆன நபர் இத்தகுதியில் போட்டியிட்டு இருந்தால் திமுகவை எளிதாக வென்று இருக்கலாம் என அதிமுக கிழக்கு தொகுதி தொண்டர்கள்சிலர் கூறுகின்றனர்.ஏனென்றால் இப்ப இருக்கும் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் கிறிஸ்தவர் நல்லெண்ண இயக்கத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே செய்துள்ளார். கிழக்கு தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை எனவும் கூறுகின்றனர்.

தற்போது தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் கிழக்கு தொகுதியில் போட்டியிட உள்ளதால் அதிமுக வேட்பாளர் 3வது இடத்தை பிடிப்பாரா அல்லது நாம் தமிழர் வேட்பாளருக்கு அடுத்து நான்காவது இடத்தை பிடிப்பாரா? என்பது ராஜசேகரின் செயல்பாட்டில் தான் உள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.