Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மேற்கு தொகுதி அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி, வேதனை, விரக்தி,அதிருப்தி.

0

'- Advertisement -

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் கே என் நேரு போட்டியிட உள்ளார்.

Ad banner

இந்த தொகுதியில் 2011 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் நேருவை எதிர்த்து போட்டியிட்ட மரியம் பிச்சை 77,492 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.இவருக்கு அமைச்சர் பதவி வழங்கினார் ஜெயலலிதா.ஆனாலும் எதிர்பாராத விபத்தில் அகால மரணம் அடைந்தார் மரியம் பிச்சை.இதன் பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தலில் பரஞ்சோதி இதே நேருவை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.இவரும் அமைச்சராக பதவி வகித்தார்.

 

2016 மற்றும் 2021 இல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அமைச்சர் கே என் நேரு வெற்றி பெற்றார்.

 

இதனால் இந்த தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றது.வருகின்ற சட்டமன்ற தேர்தலில் இத்தொகுதியில் போட்டியிட அதிமுக நிர்வாகிகள் பலரும் விருப்ப மனு அளித்திருந்தனர்.

 

மேலும் அதிமுக தொண்டர்கள் அனைவரும் இத்தொகுதியில் நமது கட்சியை சேர்ந்த யார் என்றாலும் அவரை வெற்றி பெற வைத்து நேருவை தோற்கடிக்க வேண்டும் என உறுதி கொண்டு இருந்தனர்.

 

இந்த நிலையில் தற்போது மேற்கு தொகுதியில் போட்டியிட என்.டி.ஏ கூட்டணி கட்சி வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. (இத்தகுதியில் போட்டியிட உள்ளதாக கூறப்படும் நபர் பல கட்சி சென்று வந்தவர் என்பது அனைவரும் அறிந்தது.ஆனால் இத்தொகுதியில் இவரை யாருக்கும் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதுகுறித்து அதிமுக தொண்டர்களிடம் கேட்டபோது அமைச்சர் நேரு குறித்து அமலாக்கத்துறை வழக்கு.அரசு பணிகளுக்கு லஞ்சம் என பல குற்றச்சாட்டுகளை என கூறினர் அது நமக்கு தேவையில்லை.

 

மேலும் அவர்கள் கூறியது:- இத்தொகுதியில் அமைச்சர் நேருவை எதிர்த்து வெற்றி பெற முடியாது என திமுகவினர் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர்.ஆனால் இந்த முறை திமுக மீது உள்ள அதிருப்தியில் கண்டிப்பாக மேற்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் என கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக உழைத்து வருகிறோம்.திடீரென கூட்டணி கட்சிக்கு ஒதுக்கி இருப்பது மிகுந்த வருத்தத்தையும் அதிர்ச்சியும் அளிக்கிறது.

 

இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குளியுங்கள் என நான்கு வருடமாக வீடு வீடாக சென்று அனைவரையும் மூளை சலவை செய்து வைத்துள்ளோம்.திடீரென கூட்டணி கட்சி வேட்பாளருக்கு எப்படி நாங்கள் வாக்கு சேகரிக்கப் போவது.இந்த தொகுதியில் போட்டியிட உள்ள நபருக்கு எங்களையே யார் என்று தெரியாது. இவரை பற்றி எப்படி மக்களிடம் நாங்கள் எடுத்துக் கூறுவது.அதிமுக நிர்வாகிகள் பலரும் மேற்கு தொகுதியில் போட்டியிட ஆர்வமாக இருந்தனர் , இத்தனை வருடமாக உழைத்து வந்த யாருக்கும் சீட்டு இல்லை என்பது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

எதற்காக? ஏன் மேற்கு தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டது,எப்படி முழுமனதாக நாங்கள் களப்பணி ஆற்ற முடியும் என அதிமுக தொண்டர்கள் புலம்பி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.