பாரத பிரதமர் கலந்து கொண்ட திருச்சி பொதுக்கூட்டத்தில் பத்திரிகையாளர்களுக்கு காலாவதியான தின்ப்பண்டங்களை வழங்கிய திருச்சி மாவட்ட பாஜக தலைவர் ஒண்டிமுத்து.
திருச்சியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாரத பிரதமர் மோடி அவர்கள் கலந்து கொண்டு ரூ.5, 650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் செய்தி சேகரிப்பதற்கு பத்திரிக்கையாளர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்களுக்கு ஆன்லைன் மூலம் அப்ளை செய்யக் கூறி அவர்களுக்கு இன்று திருச்சி பாஜக அலுவலகத்தில் பாஸ் வழங்கப்பட்டது.
பத்திரிகையாளர்கள் அனைவரும் மாநாட்டு முதலில் அமர வைக்கப்பட்ட பின் அவர்களுக்கு மிக்சர்,முந்திரி பருப்பு போன்ற தின்பண்டங்கள் ஐந்து ரூபாய் பாக்கெட்டில் தரப்பட்டது.சில பாக்கெட்டுகளில் தயாரிப்பு தேதி மட்டுமே இருந்தது முடிவு தேதி இல்லை. மேலும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட காரச்சேவு , மிக்சர் பாக்கெட்கள் காலாவதியானது.இதனை தின்று பலருக்கும் வயிற்றுப்போக்கு போன்ற உடல் கோளாறு ஏற்பட்டது.

இந்திய திருநாட்டின் பிரதமர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பல மணி நேரம் காத்திருந்து செய்தி சேகரிக்க வந்த பத்திரிக்கையாளர்களுக்கு காலாவதியான திண்பண்டங்களை ஏற்பாடு செய்த திருச்சி மாவட்ட பாஜக தலைவர் ஒண்டி முத்துவை என்னவென்று கூறுவது யார் தெரியவில்லை?

