Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: ஊதிய உயர்வு வழங்கிட மறு ஆலோசனை வழங்கிடக் கோரி தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

0

'- Advertisement -

திருச்சி மன்னார்புரத்தில் மின் வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம்.

Ad banner

ஏராளமானோர் பங்கேற்பு. மின்வாரியத்தில் பணி புரியும் கிளாஸ் – 1 மற்றும் கிளாஸ் – 2

பொறியாளர்களுக்கும்,அலுவலர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கிட மறு ஆலோசனை வழங்கிடக் கோரி தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில்

TVK ad

கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மன்னார்புரம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நாலாவது நாளாக நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு இன்ஜினியர் அசோஷியேசன் மாநில செயலாளர் விக்ரமன் தலைமை தாங்கினார்.

மின்துறை பொறியாளர் அமைப்பு மாநில துணை பொதுச்செயலாளர் இருதயராஜ், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வட்ட செயலாளர் நடராஜன்,எம்ப்ளாயீஸ் பெடரேசன் சிவசெல்வம், இன்ஜினியர் சங்கம் சங்கர் கணேஷ், தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் ஆலய மணி,நகரிய கோட்ட பொறியாளர் முத்துராமன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.