Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மத்திய மாவட்ட செயல்படு கூட்டத்தில் தஞ்சையில் “வெல்லும் தமிழ் பெண்கள்” மகளிர் மாநாட்டில் திருச்சியிலிருந்து 10,000 பேர் பங்கேற்கத் தீர்மானம்.

0

'- Advertisement -

தஞ்சையில் “வெல்லும் தமிழ் பெண்கள்” மகளிர் மாநாட்டில் திருச்சியிலிருந்து 10,000 பேர் பங்கேற்கத் தீர்மானம்.

Ad banner

வருகின்ற 26.01.2026 திங்கட்கிழமை அன்று, தஞ்சாவூரில் “வெல்லும் தமிழ் பெண்கள்” என்ற தலைப்பில் டெல்டா மண்டல மகளிர் மாநாடு நடைபெறவுள்ளது.

திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரும், டெல்டா மண்டலப் பொறுப்பாளருமான கே.என். நேரு அவர்களின் முயற்சியினால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்த மாநாட்டைப் பெரும் வெற்றி அடையச் செய்யும் வகையில், திருச்சி சாஸ்திரி சாலையில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில், மாநகரச் செயலாளர் மேயர் அன்பழகன் முன்னிலையில் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது,

இந்த கூட்டத்தில் திருச்சி மத்திய மாவட்ட கழகத்தின் சார்பில் 10,000-க்கும் அதிகமான மகளிரைத் திரட்டி அழைத்துச் செல்வது என்றும், இதற்காக நிர்வாகிகள் அனைவரும் அயராது பாடுபடுவது என்றும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

இந்த செயற்குழு கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் கவுன்சிலர் முத்து செல்வம், அவைத்தலைவர் பேரூர் தர்மலிங்கம் பொருளாளர் துரைராஜ் , கோட்டத் தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன் ,துர்கா தேவி மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் மதனா,பகுதி செயலாளர் மோகன் தாஸ், கிராப்பட்டி செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.