திருச்சி மாநகர காவல்துறையினர் பறிமுதல் செய்த வாகனங்கள் பொது ஏலம் முலம் வசூலிக்கப்பட்ட ரூ 9 லட்சம் அரசு கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
திருச்சி மாநகர காவல்துறை
போதை பொருள் கடத்தல் வழக்குகளில்
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் முலம் வசூலிக்கப்பட்ட
ரூ 9 லட்சம் அரசு கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
திருச்சி மாநகர போதை பொருள் ஒழிப்புக்குழுவின் தலைவர்/மாநகர காவல் ஆணையர் காமினி, உத்தரவின் பேரில, மாநகர காவல்துறையினரால் போதை பொருள் கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு சக்கர வாகனங்கள் 25, நான்கு சக்கர வாகனங்கள் 4 என மொத்தம் 29 வாகனங்களை, நேற்று திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் காவல் துணை ஆணையர், தலைமையில்ம் மற்றும் போதை பொருள் ஒழிப்பு கமிட்டி உறுப்பினர்கள் முன்னிலையில் பொது ஏலத்தில் விடப்பட்டன.

மொத்தம் 29 வாகனங்கள் பொதுமக்களால் ஏலம் எடுக்கப்பட்டது. பொது ஏலம் மூலம் பெறப்பட்ட விற்பனை தொகையான ரூ.9,63,1164/-ஐ ( ஜி எஸ் டி வரிகள் உட்பட) அரசு கணக்கில் செலுத்தப்பட்டது.

மேலும் திருச்சி கே.கே.நகர் மாநகர ஆயுதப்படையில் உள்ள திருமண மண்டபத்தினை புதிய மரக்கதவுகள், நவீன கழிப்பறைகள், வாகன நிறுத்துமிடங்களை புனரமைப்பு செய்து காவல்துறை
அமைச்சு பணியாளர்கள் மற்றும் தனிநபர்களின் வீட்டு திருமணம், காதணி போன்ற விழாவினை நடத்துவதற்கு ஏதுவாக புதுப்பொலிவுடன் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது மேற்படி திருமண மண்டபத்தினை முன்பதிவு செய்துக்கொள்ள திருச்சி மாநகர ஆயுதப்படை அலுவலகத்தினை தொடர்பு கொள்ள வேண்டும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

