ஸ்ரீரங்கத்தில் வீட்டில் புகுந்து பெண்ணை மிரட்டி 85 பவுன் நகை மற்றும் பணம் திருடியதாக கணவன் மனைவி மீது புகார்.
ஸ்ரீரங்கத்தில்
வீட்டில் புகுந்து பெண்ணை மிரட்டி 85 பவுன் நகை மற்றும் பணம் திருடியதாக
கணவன் மனைவி மீது புகார்.
திருச்சி திருவானைக்காவல் ஐந்தாவது பிரகாரம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் இவரது மனைவி அபிராமி (வயது 42 ) இவர் திருச்சியை சேர்ந்த கணவன் மனைவி இடம் ரூபாய் 30 லட்சம் பணம் கடன் வாங்கி உள்ளார்.அந்த கடனுக்கு தன்னுடைய நிலத்தை அடமானம் வைத்துள்ளார் .

இந்த நிலையில் .ஒரு வருடத்தில் வாங்கிய கடன் பணத்தை வட்டியுடன் திருப்பி கொடுத்துவிட்டார். இந்நிலையில் கடன் கொடுத்த கணவன், மனைவி இருவரும் சேர்ந்து சம்பவத்தன்று அபிராமி வீட்டுக்குள் அத்துமீறு நுழைந்து வீட்டை சேதப்படுத்தி அபிராமியை மிரட்டி வீட்டில் இருந்த 85 பவுன் நகை மற்றும் ரூபாய் 75 ஆயிரம் பணத்தை திருடி சென்று உள்ளனர்..

இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசாரிடம் அபிராமி புகார் கொடுத்துள்ளார்
அந்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் கணவன், மனைவி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

