Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் ஒரே நாளில் 3ம் நம்பர் லாட்டரி எழுதிய 25 பேர் அதிரடி கைது. மிரட்டும் வியாபாரிகள் சிக்குவார்களா?

0

'- Advertisement -

திருச்சி மாநகரில் 3ம் நம்பர் லாட்டரி எழுதிய 25 பேர் கைது.

 

திருச்சி கண்டோன்மென்ட் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட தஞ்சை ரோடு டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த சிவராமன் (வயது 56 )என்பவர்ரை கண்டோன்மென்ட் போலீசார் கைது செய்துள்ளனர். இதே போன்று அரியமங்கலம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட நேருஜி நகர் பகுதியில் மூணாம் நம்பர் லாட்டரி சீட்டு எழுதிய அரியமங்கலம் பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 42) அவரது மனைவி ஜலிலா (வயது 38) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஸ்ரீரங்கத்தில் ராகவேந்திரா வளைவு அருகில் கேரளா மூணு நம்பர் லாட்டரி எழுதிய ஆசை தம்பி (வயது 67) ராஜ்குமார் (வயது 32) ஸ்ரீரங்கம் மேற்கு வாசல் பகுதியில் நம்பர் எழுதிய தெப்பக்குளம் பகுதி சேர்ந்த பிரவீன் குமார் ( வயது30),வினோத் குமார் (வயது 30) ஆகியோரை போலீசார் கைது செய்து ஜாமினில் விடுதலை செய்தனர்.

 

இதேபோன்று கோட்டை போலீசாரத்துக்கு உட்பட்ட

திருச்சி கோட்டை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட இபி ரோடு சத்தியமூர்த்தி நகர் பகுதியில் சேர்ந்த வீரன் (வயது 42) என்பரை கே எல் நம்பர் எழுதியதாக போலீசார் கைது செய்துள்ளனர். இதே போன்று, இபி ரோடு மதுர மைதானம் அருகில் 3ம் நம்பர் எழுதிய லாட்டரி பழனியம்மாள் (வயது 56), இபி ரோடு பகுதியை சேர்ந்தவயது 53 ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து ஜாமினில் விடுதலை செய்தனர்.

இதேபோன்று இபி ரோடு பகுதியில் நம்பர் சீட்டு எழுதிய வடக்கு காட்டுரை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (வயது 27), இபி ரோடு தேவநாதபுரம் பகுதியில் மூணாம் நம்பர் லாட்டரி நம்பர் எழுதிய சந்திரசேகர் (வயது 41)ஆகிய இரண்டு பேரை கோட்டை போலீசார் கைது செய்துள்ளார்.

 

பாலக்கரை போலீஸ்சரகத்துக்கு உட்பட்ட சங்கிலாண்டபுரம் பகுதியில் கேரளா மூணா நம்பர் லாட்டரி நம்பர் எழுதிய இளையராஜா (வயது 42) அந்தோணி பிரபு (வயது 25) ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். இதில் இளையராஜா ரவுடி பட்டியலில் உள்ளார்.

தில்லைநகர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் மூணாம் நம்பர் கேரளா லாட்டரி எழுதிய ஆழ்வார்தோப்பு பகுதியை சேர்ந்த பாபு (வயது 54), உறையூர் மெயின் ரோட்டில் மூணாம் நம்பர் எழுதிய கைலேஷ் குமார் (வயது 31) கணேஷ் (வயது 24) மற்றும் உறையூர் எம்ஜிஆர் சிலை அருகே முஸ்லிம் தெரு பகுதியில் கே.எல். மூணு நம்பர் லாட்டரி எழுதிய தினேஷ்குமார் (வயது 31) ராதாகிருஷ்ணன் (வயது 55) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் உறையூர் பகுதியில் மூணாம் நம்பர் நான்கு நம்பர் எழுதி வந்தார் சபரி (வயது 54) பெரியசாமி மனைவி நாகஜோதி (வயது 58 ) ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுதலை செய்தனர்..

அரசு மருத்துவமனை போலீசரகத்திற்கு உட்பட்ட பகுதியில் மூணாம் நம்பர் லாட்டரி எழுதிய சுரேஷ்குமார் (வயது 40) பாலசுப்பிரமணியம் (வயது 55) ,சண்முகா நகர் பகுதியில் லாட்டரி நம்பர் எழுதி வந்த சரவணன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.மேலும் சண்முக நகர் நாலாவது கிராஸ் பகுதியில் லாட்டரி சீட்டு நம்பர் எழுதி வந்த சரவணன் (வயது 42 )என்பவரை போலீசார் கைது செய்து ஜாமினில் விடுதலை செய்தனர்.

 

இதேபோன்று காந்தி மார்க்கெட் காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட காந்தி மார்க்கெட் உள்ளே ஒருவர் லாட்டரி நம்பர் எழுதி வருவதாகவும் காவல்துறைக்கு தெரியுமா என கேட்டால் மூட்டை தூக்கும் தூக்கி தூக்கி காட்டி புலையும் மிரட்டல் விடுவதாகவும் கூறப்பட்டு வருகிறது . இவர் மீதும் காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசார் நடவடிக்கையை எடுப்பார்களா காந்தி மார்க்கெட் சுமைதூக்கும் தொழிலாளர்கள் சிலர் கூறியுள்ளனர் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.