ஸ்ரீரங்கம் மாரியம்மன் கோவிலுக்குள் புகுந்து 12 பவுன் தாலி செயின் திருடிய கணவன் மனைவி கைது .
ஸ்ரீரங்கம் கீழவாசல் கிருஷ்ணன் கோவில் தெருவில் செல்வமாரியம்மன் கோவில் உள்ளது.இந்த மாரியம்மன் கோவிலில் நேற்று மாலை கோவில் திறந்து இருந்த பொழுது கணவன் மனைவி இருவரும் சாமி கும்பிடுவது போல் கோவிலுக்குள் சென்று உள்ளனர்.
அப்பொழுது அங்கு கோவிலில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மாரியம்மன் கருவறைக்குள் அந்த கணவன் உள்ளே புகுந்து சென்று மாரியம்மன் கழுத்தில் இருந்த 12 பவுன் தாலி செயினை திருடிக் கொண்டு அங்கிருந்து கணவன், மனைவி இருவரும் இரு சக்கர வாகனத்தில் தப்பி ஓட முயன்றர்.
அப்பொழுது அங்கு வந்த கோவில் நிர்வாகி பெரியசாமி இதனை பார்த்து அதிர்ச்சடைந்து கூச்சலிட்டார். பிறகு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இரண்டு பேரையும் பிடித்து ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த போது
திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது கணவன் மனைவி என்பதும், சேலம் மாவட்டம் நரிக்குறவர் காலனி சேர்ந்த சிவா (வயது 23) மற்றும் அவரது மனைவி என்பது தெரிய வந்தது. இதையடுத்து திருவரங்கம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கணவன் மனைவி இருவரையும் கைது செய்து 12 பவுன் நகையை மீட்டனர்.
மேலும் திருட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.

