திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வந்த வாலிபர் திடீர் மாயம்
திருச்சி சோமரசம்பேட்டை கீழவயலூரில் உள்ள ஒரு தனியார் அறக்கட்டளையில் சௌகர் (வயது 30) என்ற வாலிபர் தங்கி இருந்தார்.இவர் சற்று மனநிலை சரியில்லாதவர்.
இந்நிலையில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்து உள்ளார்.
இந்நிலையில் நேற்று சௌகர் திடீரென்று மருத்துவமனையில் இருந்து காணாமல் போய்விட்டார்.
அரசு மருத்துவமனை வளாகம் முழுவதும் தேடிப் பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்து அறக்கட்டளை நிர்வாகி பூபதி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் .
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சௌகரை தேடி வருகின்றனர்.

