Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கேகே நகரில் வீட்டில் ஆள் இருக்கும்போது திருட முயன்ற நபர்கள் .

.

0

'- Advertisement -

வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிக்க முயற்சி

 

Ad banner

மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு.

 

 

திருச்சி கே கே நகர் பிரேம் கார்டன் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் ( வயது66).திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிகிறார். கடந்த 25 ந்தேதி இரவு தனது வீட்டில் மனைவி ,மகள் மருமகன் ஆகியோருடன் தூங்கிக் கொண்டிருந்தார். அன்று அதிகாலை 2.15 மணியளவில், ஏதோ சத்தம் கேட்டு, இவரது மனைவி விழித்தெழுந்தார்.

 

TVK ad

அப்பொழுது மர்ம நபர் ஒருவர் முகமூடி அணிந்து வீட்டிற்குள் நுழைந்து அவரது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைக் பறிக்க முயன்றார். இதையடுத்து உடனே அதனை தடுக்க முயன்றபோது, மர்ம ஆசாமிகள் மனோகரன் மற்றும் அவரது மருமகனை கல்லால் தாக்கி

அவர்களை கீழே தள்ளிவிட்டு மற்றொரு மர்ம ஆசாமியுடன் தப்பிச் சென்றார்.

 

இதில் மனோகரனுக்கு தலையில் காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

 

இது குறித்து மனோகரன் குடும்பத்தார் அளித்த புகாரின் பேரில் கே.கே.நகர் குற்றப்பிரிவு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய இரண்டு மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.