

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களால் கடந்த 6ம் தேதி மாநகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணி நியமன ஆணை பெற்றவர்களில் திருச்சி மாநகராட்சியில் பணிபுரிய அரசாணை பெற்ற 16 பேர் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு அவர்களை நேரில் சந்தித்த வாழ்த்து பெற்றனர். இந்த நிகழ்வில் மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன் ஆகியோர் உள்ளனர்.

