திருச்சி பாலக்கரையில் வயிற்று வலி தொல்லையால்
பெண் திடீர் சாவு
போலீசார் விசாரணை
திருச்சி பாலக்கரை காஜா பேட்டை புது தெருவை சேர்ந்தவர் நாசர் இவரது மனைவி சம்சாத் பேகம் (வயது 53) இவர் கடந்த சில வருட காலமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் கடந்த 16 ந் தேதி வீட்டில் இருந்த சம்சாத் பேகத்திற்கு வயிற்று வலி அதிகமாக ஏற்பட்டத்தை தொடர்ந்து அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் மேல் சிகிச்க்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் சம்சாத் பேகம் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இந்த சம்பவம் குறித்து நாசர் பாலக்கரை போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.