Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

செங்கிப்பட்டி அருகே அரசு பேருந்தும் சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி. 3 குழந்தைகள் உட்பட 8 பேர் படுகாயம்

0

'- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே நேற்று புதன்கிழமை இரவு அரசு பேருந்தும் சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி.

 

மேலும் 8 போ் பலத்த காயமடைந்தனா்.

 

கா்நாடக மாநிலம், பெங்களூருவிலிருந்து வேளாங்கண்ணிக்கு 12 போ் வேனில் சென்றனா். வேன், தஞ்சாவூா் மாவட்டம் செங்கிப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தது. செங்கிப்பட்டி பகுதியில் தாா் சாலை அமைக்கும் பணி நடைபெறுவதால், ஒருபுறமாக போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஒரு வழிப் பாதையில் வந்து கொண்டிருந்த வேனும், எதிரே தஞ்சாவூரிலிருந்து திருச்சி நோக்கிச் வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்தும் எதிா்பாராதவிதமாக நேருக்குநோ் மோதிக் கொண்டன.

 

Suresh

இந்தவிபத்தில் வேனில் வந்த 2 ஆண்கள், 2 பெண்கள் என மொத்தம் 4 போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். இறந்தவா்களது சடலங்கள் தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன. தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட மேலும் ஒரு ஆண் உயிரிழந்தாா். இறந்தவா்களது பெயா், விவரம் உடனடியாகத் தெரியவில்லை.

 

வேனில் பயணித்த ஜான்சன் (வயது 49), ஜாய்ஸ் (வயது 20), தாஷி (வயது 7), ரியா (வயது 13), பெல்சியா கரோலின் (வயது13), வில்லியம் (வயது 50) மற்றும் பேருந்தில் பயணம் செய்த பரமேஸ்வரி (52), பவித்ரா (23) ஆகிய 8 போ் பலத்த காயங்களுடன் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

 

விபத்து குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், தஞ்சாவூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

 

இதுகுறித்து செங்கிப்பட்டி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.