Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வீட்டில் இளம்பெண்களை வைத்து விபச்சாரம் செய்த 25 வயது வாலிபர் கைது .

0

'- Advertisement -

பெருந்துறையில் வீட்டில் இளம் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Ad banner

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வாய்க்கால் மேடு பாலாஜி நகரில் ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது . அதன் பேரில் ஈரோடு போலீசார் திடீரென அந்த வீட்டில் புகுந்து சோதனை மேற்கொண்டனர்.

 

இதில், அங்கு 3 இளம் பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதை போலீசார் உறுதி செய்தனர்.

இதையடுத்து இளம்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மணக்கடவுதேர்பட்டியை சேர்ந்த சீனிவாசன் மகன் பாலமுருகன் (வயது 25), என்பவரை போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி பெருந்துறை கிளை சிறையில் அடைத்தனர்.

 

மேலும், அங்கு இருந்த 22 வயது, 24 வயது, 27 வயதுடைய 3 பெண்கள் அந்த வீட்டிலிருந்து  மீட்கப்பட்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.