மண்டலத்தில் 41 தொகுதிகளிலும் திமுக வெல்லும்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற திமுக தெற்கு மாவட்ட திமுக கூட்டத்தில் அமைச்சர் கே.என். நேரு .
மண்டலத்தில் 41 தொகுதிகளிலும் திமுக வெல்லும்:
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக வென்று 7 -வது முறையாக ஆட்சி அமைக்கும்
திருச்சி தெற்கு மாவட்ட திமுக கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு
திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இன்று நடைபெற்றது.
திருச்சி மாநகர திமுக செயலாளரும்,திருச்சி மாநகராட்சி மண்டல குழு தலைவருமான மதிவாணன் வரவேற்றார். இந்த கூட்டத்தில் திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டார். கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில்,
வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று மீண்டும் 7 -வது முறையாக ஆட்சி அமைக்கும். திருச்சி மண்டலத்தில் 41 தொகுதிகள் உள்ளது. தற்போதைய சூழலில் 41 தொகுதிகளிலும் திமுக தான் முழுமையாக வெற்றி பெறும் என்கிற நிலை உள்ளது.
கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் உள்ள பிரச்சனைகள், தொகுதியில் நிலவும் பிரச்சனைகள், கூட்டணி கட்சியினரின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டு அதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தாலும் அனைத்தும் சரி செய்யும் வரை வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில்,
திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு ஏழாவது முறையாக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அமர ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் என்றார்.
கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கே.என்.சேகரன், சபியுல்லா,

மாவட்டத் துணைச் செயலாளர்கள் லீலா வேலு, மூக்கன், செங்குட்டுவன்,
துணை மேயர் திவ்யா தனக்கோடி, மண்டல குழு தலைவர் ஜெயநிர்மலா
,பகுதி செயலாளர்கள் கொட்டப்பட்டு இ.எம்.தர்மராஜ், ஏ.எம்.ஜி விஜயகுமார், பாபு, மணிவேல், சிவக்குமார், மோகன், ராஜ்முகம்மது, நீலமேகம், பொதுக்குழு உறுப்பினர்கள் கவுன்சிலர் கே.கே .கே .கார்த்திக், வேங்கூர் தனசேகரன், கவுன்சிலர்கள் சாதிக் பாட்ஷா, எல்.ஐ.சி , சங்கர், மணிமேகலை ராஜபாண்டி,
தொழிலதிபர் ஏ.பி ரகுநாதன்,மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்த பின்
நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறுகையில்,
100 ரூபாய் இருந்தால் யார் வேண்டுமானாலும் போஸ்டர் ஓட்டலாம். மதுரையில் விஜய்யை முதல்வர் என அச்சடித்து ஒட்டப்பட்ட போஸ்டர் குறித்து அமைச்சர் கே.என். நேரு பதில் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில்,
திமுக விற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதை மேலும் மெருகேற்றும் வகையில் அனைத்து இடங்களிலும் நிர்வாகிகளை அழைத்து நாங்கள் கூட்டங்கள் நடத்தி வருகிறோம். அனைத்து நிர்வாகிகளும் சிறப்பாக பணியாற்றுகிறார்கள் என்றார்.